fbpx

நோட்…! தெருநாய் தொல்லை இருக்கா உங்களுக்கு…? உடனே இலவச எண்ணுக்கு கால் பண்ணுங்க….!

தெருநாய்களின் தொல்லைகள் குறித்து 1913 என்ற இலவச உதவி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பெருகி வரும் தெரு நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அவை பிடிக்கப்பட்டு, வாகனங்கள் மூலம் திரு.வி.க நகர் மண்டலத்திற்குட்பட்ட பேசின் பாலம் நாய் இனக்கட்டுப்பாடு மையம் மற்றும் கண்ணாம்மாப்பேட்டை நாய் இனக்கட்டுப்பாடு மையம் ஆகிய இனக்கட்டுப்பாடு மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு கால்நடை மருத்துவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில், இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பொதுசுகாதாரத்துறையின் சார்பில் கடந்த டிசம்பர் மாதம் 21 முதல் 27-ம் தேதி வரை இரண்டு வார காலத்தில் 450 தெருநாய்கள் பிடிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் 325 தெருநாய்களுக்கு, நாய்கள் இனக்கட்டுப்பாடு மையத்தில் கால்நடை மருத்துவக் குழுவினரால் இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் நாய்க்கடி மூலம் மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய வெறிநாய்க்கடி நோய் வராமல் தடுக்க அவைகளுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசியும் போடப்பட்டு, பிறகு பிடித்த இடத்திலேயே விடப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருநாய்களின் தொல்லைகள் குறித்து 1913 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

மாணவர்களே...!இன்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை...! ஆட்சியர் அறிவிப்பு...!

Fri Jan 6 , 2023
ஆருத்ரா தரிசனம் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு இன்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை. தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படும் விழாக்கள், சிறப்பு தினங்கள் மற்றும் பண்டிகைகளுக்கு மாநிலம் முழுவதும் விடுமுறை அறிவித்து உத்தரவிடுவது வழக்கம். தமிழகத்தின் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் விழாக்களுக்கு தமிழக அரசு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக குறிப்பிட்ட பகுதியில் மட்டும் உள்ளூர் விடுமுறை வழங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. அந்த […]

You May Like