fbpx

‘வாரத்திற்கு ஒரு முறை இன்சுலின்’.. சர்க்கரை நோயாளிகளுக்கான Game-changer.. இந்தியாவில் எப்போது அறிமுகம்..?

இந்தியாவில் 2025ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் “வாரத்திற்கு ஒருமுறை இன்சுலின்” மருந்தை அறிமுகப்படுத்த நோவோ நார்டிஸ்க் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இன்று நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் நீரிழிவு அல்லது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இந்தியாவில் மொத்த இறப்புகளில் 2 சதவீதம் நீரிழிவு நோயால் மட்டுமே ஏற்படுகிறது. நீரிழிவு நோய் என்பது ஒரு நாள்பட்ட நிலையாகும்.. இது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாவதால் ஏற்படும் நோயாகும்.. சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்காமல் இருப்பதால் அது ஆரோக்கியம் தொடர்பான பல கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கும். இதனால் உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக நோய், இதய நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.. இதில் டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு என 2 வகைகள் உள்ளன. டைப் 1 நீரிழிவு நோயில், கணையம் இன்சுலினை உற்பத்தி செய்யாது, அதே சமயம் டைப் 2 நீரிழிவு நோயில், கணையத்தால் குறைந்த அளவு இன்சுலின் உற்பத்தி செய்யப்படுகிறது..

எனவே சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க, தினசரி மருந்துகளை எடுத்துக்கொண்டு வருகின்றனர்.. இந்நிலையில், தினசரி டோஸுக்குப் பதிலாக வாரத்திற்கு ஒருமுறை இன்சுலின் முறையைச் செயல்படுத்தப்பட உள்ளது.. டென்மார்க்கை தளமாகக் கொண்ட நோவோ நார்டிஸ்க் (Novo Nordisk) மருந்து நிறுவனம் இந்த இன்சுலின் மருந்தை அறிமுகம் செய்ய உள்ளது.. இது இந்தியாவில் உள்ள 7.7 கோடிக்கும் அதிகமான நீரிழிவு நோயாளிகளில், 50 லட்சம் நோயாளிகள் இன்சுலின் சார்ந்தது உள்ளனர். எனவே இந்த மருந்து கேம்-சேஞ்சராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

நோவோ நார்டிஸ்க் குளோபல் பிசினஸ் சர்வீஸின் கார்ப்பரேட் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ஜான் சி டாபர், இந்த தகவலை உறுதிப்படுத்தி உள்ளார்.. இன்சுலின் மருந்தின் சோதனையிலிருந்து நேர்மறையான முடிவுகளை நிறுவனம் எதிர்பார்க்கிறது என்றும், சோதனைகளின் மிகப்பெரிய மையங்கள் இந்தியாவில் வைக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார்.

நோவோ நார்டிஸ்க் இந்தியாவின் கார்ப்பரேட் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான விக்ராந்த் ஷ்ரோத்ரியா இதுகுறித்து பேசிய போது “ அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால் 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் வாரத்திற்கு ஒருமுறை செலுத்தும் இன்சுலின் மருந்து அறிமுகம் செய்யப்படும்.. 3.5 மில்லியனுக்கும் அதிகமான (35 லட்சம்) மக்கள் தங்கள் மருந்துகளுக்காக எங்களை நம்பி உள்ளனர்.. நிறுவனத்தின் வருவாயில் இந்தியா வெறும் 1 சதவீத பங்களிப்பை அளிக்கும் அதே வேளையில், உலகளவில் நிறுவனத்தைச் சார்ந்திருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, அந்த நோயாளிகளில் 8 சதவீதம் பேர் இந்தியாவில் உள்ளனர்..

இன்று மனித இன்சுலின் சிகிச்சைக்கான செலவு, கடைகளில் கிடைக்கும் ஒரு கப் காபியை விட குறைவாக உள்ளது. ஆனால் மருந்துகளின் விலையை விட மோசமாக நிர்வகிக்கப்படும் சர்க்கரை அளவு காரணமாக நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். 2 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிப்படுவது அல்லது கால் துண்டிக்கப்படுதல், சிறுநீரக செயலிழப்பு, இதய நோய் அல்லது பக்கவாதம் போன்ற சவால்களை எதிர்கொள்வது போன்ற சூழ்நிலைகள் ஏற்படும்.” என்று தெரிவித்தார்..

Maha

Next Post

பெண்களே Happy News... தங்கம் விலை மேலும் குறைவு.. எவ்வளவு தெரியுமா..?

Fri Feb 17 , 2023
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.42,000-க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்நிலையில் தங்கம் விலை […]
தங்கம்

You May Like