fbpx

சார்பதிவாளர் அலுவலகத்தில் இன்று ஒரு நாள் கூடுதல் டோக்கன்…! பத்திரப் பதிவுத்துறை அதிரடி உத்தரவு…!

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாசி மாதத்தின் முகூர்த்த தினமான இன்று கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என பத்திரப் பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன் ஒதுக்கீடு செய்வது வழக்கம். தற்போது மாசி மாதத்தின் மங்களகரமான தினமான இன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

இதனை ஏற்று மாசி மாதத்தின் சுபமுகூர்த்த தினமான இன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுக்கு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன்களும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

English Summary

One day additional token at the Registrar’s Office today

Vignesh

Next Post

சாணக்ய நீதி படி.. வாழ்க்கையில் முன்னேற நினைப்பவர்கள் இந்த இடங்களுக்கு செல்லக்கூடாது..!!

Mon Mar 10 , 2025
Chanakya Niti: Did you know that according to Chanakya Niti, you should never go to these 6 places?

You May Like