அழகிகளுடன் ‘Chatting’ செய்வதற்காக ஒரு லட்சம் ரூபாயை கட்டி ஏமாந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் தடி ஜெயசேகர். இவர் நெல்லை மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்டான் பகுதியில் இருக்கும் சிப்காட் வளாகத்தில் பொறியியலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். மேலும், இவரது நண்பருடன் தாழையத்து அருகே உள்ள பண்டாரக்குளம் பகுதியில் தங்கி பணிபுரிந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இவரது செல்போனுக்கு வந்துள்ள லிங்க் ஒன்றை ஓபன் செய்து அவருக்கு பல்வேறு அழகிகளுடன் பேசலாம் எனக் கூறி மர்ம கும்பல் ஒன்று இவருக்கு வலை விரித்துள்ளது. இதில் பல்வேறு பெண்களின் புகைப்படம் வெளிவந்திருந்த நிலையில், அவர்களுடன் பேச 2,000 ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை அவர்களிடம் நேரடியாக Chat செய்ய கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
இதனை நம்பி பணத்தை கட்டிய ஜெயக்குமார் முதலில் 2,000 ரூபாயில் ஆரம்பித்து படிப்படியாக ஒரு லட்சம் ரூபாய் வரை இழந்த நிலையில், இவர்களுடன் யாரும் Chat செய்யவில்லை என கூறப்படுகிறது. பின்னர்தான் ஏமாற்றப்பட்டதை அறிந்துள்ளார் ஜெயக்குமார். பிறகு அதில், குறிப்பிடப்பட்டிருந்த செல்போன் எண்ணுக்கு அழைத்து பணத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளார். ஆனால், எதிர் தரப்பினர் தகாத வார்த்தைகளில் பேசிய நிலையில், விரக்தி அடைந்த அவர் ஜெயக்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பணிக்குச் சென்று இருந்த ஜெயக்குமாரின் நண்பர் தாழையுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே போலீசார் விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட ஜெயக்குமாரின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஏற்கனவே ஆன்லைன் சேலைகள் மூலம் மக்கள் பல்வேறு விதமாக ஏமாற்றப்பட்டு வந்த சூழ்நிலையில், வித்தியாசமான முறையில் அழகிகளை காட்டி பணத்தை ஏமாற்றியது இங்குள்ள பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.