கடந்த 2022 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 23ஆம் தேதி கோவை உக்கடம் அருகே இருக்கின்ற கோட்டை ஈஸ்வரன் ஆலயத்தின் முன்பு நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது.
இந்த சம்பவம் குறித்து பாஜகவின் தேசிய தலைமை முதல் மாநில தலைமை வரையில் பல்வேறு நபர்களும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அதோடு, கடுமையான கண்டனங்களையும் பதிவு செய்திருந்தார்கள். மேலும் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தடை செய்யப்பட்ட ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் தொடர்புள்ள ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய தமிழக காவல்துறையினர், இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புள்ள 5 பேரை கைது செய்தனர். ஆகவே இந்த வழக்கு திடீரென்று தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. அதாவது, தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்தில் தொடர்புள்ள ஒருவரால் இந்த வெடிகுண்டு விபத்து நடத்தப்பட்டுள்ளது என்பதால் மத்திய அரசு இதில் தனி கவனம் செலுத்தியது.
இதனைத் தொடர்ந்து, இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 11 பேரை கைது செய்தது தேசிய புலனாய்வு முகமை, மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகின்றது. இத்தகைய நிலையில் தான், இந்த வழக்கில் மேலும் ஒரு நபரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்திருக்கிறது.
இந்த வெடிகுண்டு விபத்தில் பலியான ஜமிஷா முபினின் நெருங்கிய நண்பரான முஹம்மத் இத்ரீஸ் என்பவர் தேசிய திறனாய்வு முகமை அதிகாரிகளின் கண்காணிப்பில் இருந்து வந்தார். இத்தகைய நிலையில் தான், இந்த குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், முகமது இத்ரீஸை நேற்று மாலை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்து இருக்கிறார்கள்.
அவருடைய கைபேசியிலிருந்து சென்ற 3 வருடங்களில் அவர் பேசிய தொடர்புகளையும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில்தான், கோவையில் கைது செய்யப்பட்ட முகமது இத்ரீஸை இன்று சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் தேசிய பலனாய்வு முகமை அதிகாரிகள் ஆஜர்ப்படுத்தி சிறையிலடைக்க இருக்கிறார்கள். ஆனால் அவரை தனியாக விசாரிப்பதற்கு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அனுமதி கேட்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.