சென்னை, ஆலந்தூர் மெட்ரோ அருகே மேம்பாலத்தில் உள்ள சாலை வழிகாட்டி பலகை பெயர்ந்து விழுந்ததால் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த மாநகர பேருந்து, வேன், ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள் மீது பெயர் பலகை விழுந்துள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்த இரண்டு பேருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனால் ஆலந்தூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.