தமிழகம் முழுவதும் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் 2,760 தற்காலிக ஆசிரியர்களுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது .
தமிழகத்தில் 2018-2019ஆம் கல்வி ஆண்டில் 95 அரசு, நகராட்சி, மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இந்தப் பள்ளிகளில் தலா 6 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 570 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
இவ்வாறு 200 மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள், 100 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 2,460 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 2,760 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு, 31.12.2021 வரை ஏற்கனவே வழங்கப்பட்ட பணி நீட்டிப்பு செய்யப்பட்டது.
பணி நீட்டிப்பு முடிவடைந்த நிலையில், அவர்களுக்கு 1.01.2022 முதல் 31.12.2022 வரை ஓராண்டுக்கு பணி நீட்டிப்பு வழங்கி அரசு உத்தரவிட்டிருந்தது. தற்போது இந்த உத்தரவானது மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிப்பு செய்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.