fbpx

கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலை.. கலங்க வைத்த வெங்காயம்.. தமிழ்நாட்டில் காய்கறிகள் விலை என்ன?

தக்காளி வெங்காயம் சமையலில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி 20 முதல் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் அடுத்த சில நாட்களில் தக்காளி விலை உச்சத்தை தொட்டது. அதன் படி மொத்த காய்கறி சந்தையிலேயே ஒரு கிலோ தக்காளி 60 முதல் 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை வர்த்தகத்தில் ஒரு கிலோ தக்காளி 90 ரூபாய் என உயர்ந்துள்ளது.

இதே போல வெங்காயத்தின் விலையும் கடந்த சில மாதங்களாகவே உச்சத்தில் உள்ளது. இதனால் வெங்காயத்தின் விலை ஒரு கிலோ 100 ரூபாய் என்ற அளவிற்கு கடந்த வாரம் எட்டியது. தற்போது காரிப் வெங்காயத்தின் வரத்து வர தொடங்கியதையடுத்து வெங்காயத்தின் விலை சற்று குறைந்துள்ளது. அதன் படி ஒரு கிலோ 65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை வர்த்தகத்தில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 75 முதல் 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது. எனவே வரும் நாட்களில் வெங்காயத்தின் விலை சற்று குறைய வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

மற்ற காய்கறிகளின் விலை : சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில்,  முருங்கைக்காய்  ஒரு கிலோ 150 முதல் 250 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், காலிஃப்ளவர் ஒன்று 10 முதல் 20 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் 25 ரூபாய்க்கும்,  அவரைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

பச்சை காய்கறிகளான பீர்க்கங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 110 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 30 முதல் 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read more ; விமானத்தில் உடலுறவில் ஈடுபட்ட காதல் ஜோடி!. வைரலாகும் வீடியோ!. சர்ச்சைக்குள்ளான சுவிஸ் ஏர்லைன்ஸ்!

English Summary

Onion price competing with tomato..!! How much is a kilo in the vegetable market? – Housewives are shocked

Next Post

மக்கானா vs வேர்க்கடலை : உடல் எடையை குறைக்க எது சிறந்தது?

Sun Dec 8 , 2024
Makhana and peanuts are among the most famous snacks. Read on to know which of these options will be healthier for you for weight loss.

You May Like