அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
கோவா’ தேர்வு எனப்படும் அரசு கணினி சான்றிதழ் தேர்வு (Certificate course in Computer on Office Automation-COA)தொழில்நுட்பக்கல்வி இயக்ககத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு புதிய பாடத்திட்டத்துடன் ஜுன் மாதம் இத்தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இந்நிலையில் தேர்வுக்கான அறிவிப்பை தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.
இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஏப்ரல் 16-ம் தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. தேர்வு கட்டணம் ரூ.1030 ஆகும். விண்ணப்பதாரர்கள் www.tndtegteonline.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை தொழில்நுட்பக்கல்வி இயக்ககத்தின் இணையதளத்தை (www.dte.tn.gov.in) விரிவாக தெரிந்து கொள்ளலாம்.