மாணவர்கள் ஆன்லைனில் கேம்விளையாடி அடிமையாகின்றனர் இதனால் ஆன்லைன் கேமுக்கு தடை செய்ய வேண்டும் என்ற தாயிடம் ஆன்லைன் கேம்ஸை தடை செய்வது சாத்தியமில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
நாகர்கோவிலைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரின் தாய் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், தனது மகள் அதிகமாக ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையானர் எனவும் ஆன்லைனில் கேம்விளையாடிக்கொண்டே ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு வீட்டை விட்டுச் சென்றுவிட்டதாகவும் அவரை திரும்ப மீட்டு கொண்டுவர வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் நிஷாபானு, ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. நிதிபதிகள் , இளம்பருவத்தினர் ஆன்லைன் விளையாட்டுக்களில் மூழ்கி தனி உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். நிஜவாழ்க்கையை ஏற்க மறுக்கின்றார்கள். தற்போதுள்ள சூழ்நிலையில்பெற்றோர்கள் குழந்தைகள் அனைவரும் செல்போனில் மூழ்கியுள்ளதால் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வது இல்லை. பிரீ பையர் என்ற விளையாட்டில் ரத்தம் தெரிப்பது போல் உள்ள காட்சிகள் வன்முறையை தூண்டுகின்றது.
தொழில்நுட்ப வளர்ச்சியில் ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்தாலும், மீண்டும் வெவ்வேறு பெயர்களில் இணையத்தில் அந்த விளையாட்டு வந்து கொண்டே தான் இருக்கின்றது. இதை முழுவதும் தடை செய்வது என்பது இயலாத காரியம். எனவே இந்த விவகாரத்தில் அவரவர் அவரவர்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டு நீதிபதிகள் இந்த வழக்கை முடித்துவைத்தனர்.