விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிலைகளை நீரில் கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் 31-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.. இதனை முன்னிட்டு தங்கள் வீடுகளிலும், தெருக்களிலும் விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் வழிபடுவார்கள்.. மேலும் விநாயகர் சதுர்த்தியில் இருந்து 3 அல்லது 5 நாட்களில் ஊர்வலமாக எடுத்து சென்று சிலைகளை நீர் நிலைகளில் கலப்பது வழக்கம்.. எனினும் இவ்வாறு நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது..
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிலைகளை நீரில் கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.. அதன்படி “ களிமண்ணால் செய்த, பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், பிளாஸ்டிக் கலக்காத விநாயகர் சிலைகளை மட்டுமே கரைக்க வேண்டும்.. மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டும் சிலைகளை கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டாம்..
சிலைகளின் ஆபரணங்களை தயாரிக்க உலர்ந்த மலர்கள், வைக்கோல் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.. சிலைகளுக்கு வர்ணம் பூச நச்சு மற்றும் மக்காத ரசாயன சாய, வண்ணப்பூச்சுகளை பயன்படுத்த கூடாது..” என்று தெரிவித்துள்ளது.. விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு கொண்டாட மாசு கட்டுப்பாட்டு வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது..