fbpx

கோடை விடுமுறை முடிவடைந்தது 5ம் தேதி பள்ளிகள் திறப்பு…..! முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!

தமிழக முழுவதும் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் 5ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிப்புகள் வெளியான நிலையில் மாணவர்களின் நலன் கருதி பள்ளி கட்டிடங்கள் தரம் தொடர்பாக முக்கிய அறிவுறுத்தல்களை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டு இருக்கிறார்.

அதாவது ஆபத்தான அல்லது ஆபத்தானதாக காட்சியளிக்கும் மரங்கள் உள்ளிட்டவற்றை பள்ளி வளாகத்தில் இருந்து அகற்ற வேண்டும் அதேபோன்று அபாயகரமானதாக உள்ள மின் கம்பங்கள் அல்லது கம்பிகள் தூங்கிக் கொண்டிருந்தால் அதனை அகற்ற வேண்டும். பள்ளிகளுக்கு அருகில் இருக்கின்ற குளங்கள் மற்றும் கிணறுகளை சுற்றி சுவர்கள் கட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதேபோல பள்ளிகளில் குடிநீர் அனைத்தும் சுத்தமாக இருக்கிறதா? என்பதையும் கண்காணிக்க வேண்டும். பள்ளி பேருந்துகள், பள்ளிகளுக்கு மாணவர்களை ஏற்றி செல்ல பயன்படும் மற்ற தனியார் வாகனங்கள் உள்ளிட்டவை தகுதி சான்றிதழ் மற்றும் காவல்துறை அனுமதி சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும்.

பழங்குடியின பகுதிகளை சேர்ந்த குழந்தைகளை பள்ளிகளுக்கு தாயத்து வரும் நோக்கத்தில் கேத்திர சாரதி திட்டம் தொடர வேண்டும். பழங்குடியின மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்றடைவதை முடிவு செய்ய ஊக்குவிப்பாளர்களின் உதவி பெற வேண்டும். பேரிடர் தனிப்பு தொடர்பாக குழந்தைகளுக்கு பயிற்சி வழங்க வேண்டும். நிலச்சரிவு மற்றும் வெள்ளம் போன்ற பேரிடர்களுக்கு ஆளாகும் பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் நடத்த வேண்டும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

Wed May 24 , 2023
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.  இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், வெப்பச்சலனம் காரணமாக, 24-05-2023 முதல் 26-05-2023 வரை தமிழ்நாடு, […]

You May Like