fbpx

விடியாத அரசு.! 4000 கோடி என்னாச்சு.? இந்த மழைக்கு சென்னை தாங்காதா.? எதிர்க்கட்சிகளின் பரபரப்பு குற்றச்சாட்டு.!

கடந்த சில தினங்களாக தலைநகர் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடும் மழை இது வருகிறது. இதனால் சென்னையின் பல இடங்களில் மழை நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் திமுக அரசை விமர்சித்து வருகின்றனர்.

இது தொடர்பாக சமூக வலைதளங்களில் அதிமுக மற்றும் பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் 4000 கோடி என்னாச்சு என என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். 2021 ஆம் ஆண்டு திமுக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த போது சிங்காரச் சென்னை என்ற திட்டத்தின் கீழ் உலக வங்கி மற்றும் ஆசிய வங்கிகளில் இருந்து 4000 கோடி நிதி பெற்று மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

இந்தப் பணிகள் சில இடங்களில் நிறைவு பெற்றும் சில இடங்களில் நிறைவு பெறாமலும் இருந்து வருகிறது. எனினும் முதலமைச்சரும் முதல் சென்னை மேயர் வரை இந்தப் பணிகள் அனைத்தும் முடிவு பெற்றதாக அறிவித்து வருகின்றனர். ஆனாலும் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் முதலமைச்சரின் தொகுதி உட்பட சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்று பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது.

இது தொடர்பாக கேள்வி எழுப்பி இருக்கும் உன்னால் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி விடியாத அரசு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே மழை நீர் வடிகால் அமைக்கப்படும் என அறிவித்திருந்தது. ஆட்சிக்கு வந்து இவ்வளவு நாட்கள் ஆகியும் இந்தப் பணிகள் நிறை உடையாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர் என தெரிவித்துள்ளார். மேலும் சாதாரண மலைக்கு இப்படி என்றால் புயல் வந்தால் என்ன ஆகும்.?எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார். இது தற்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

எப்போது வேண்டுமானாலும் எரிமலை வெடிக்கும்..!! 30 நிமிஷம் தான் டைம்..!! அரசு வெளியிட்ட எச்சரிக்கை..!!

Sat Dec 2 , 2023
ஐஸ்லாந்தின் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் அமைந்துள்ள நகரம் கிரண்டாவிக். இங்கு 3 ஆயிரம் பேர் தான் வசிக்கின்றனர். இங்கு கடந்த வாரம் ஒரு மிகப்பெரிய பள்ளம் ஒன்று ஏற்பட்டது. பின்னர், தொடர்ச்சியாக மினி பூகம்பங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. இப்படி சுமார் 1000-க்கும் மேற்பட்ட பூகம்பங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அங்கு நிலத்திற்கு அடியில் மாக்மா எனப்படும் நெருப்பு குழம்பு குவிந்து வருவதையும், பூமியின் மேற்பரப்பில் இருந்து ஒரு கிலோமீட்டருக்குள் இருப்பதையும் […]

You May Like