fbpx

நேருக்கு நேர் மோதும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்…! களைகட்டும் அரசியல் களம்.!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோருக்கு இடையே நிலவி வந்த பனிப்போர் கடந்த வருடம் ஜூலை மாதம் முடிவுக்கு வந்தது.

கடந்த வருடம் ஜூலை 11-ல் அதிமுகவின் பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுக கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் அவர்களுக்கு கட்சியின் கொடி கட்சியின் சின்னம் மற்றும் லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் வழக்கு பதிவு செய்திருந்தார்.

அதற்கு சரியான பதில் கிடைக்காத நிலையில் அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு வருகின்ற நவம்பர் 30ஆம் தேதி விசாரணைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் சட்டமன்ற சிறப்பு கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் இருந்து சென்னை வருகிறார். இந்த சட்டமன்ற சிறப்பு கூட்டம் தொடர்பாக அதிமுகவின் மூத்த நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்தக் கூட்டத்திற்கு ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொள்ள இருப்பதால் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. மேலும் சட்டமன்றத்தில் ஓபிஎஸ் இருக்கை தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்ப உள்ளதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Kathir

Next Post

புது ரூல்ஸ்...! மழை விடுமுறையை 3 மணி நேரத்திற்கு முன்னதாக தெரிவிக்க வேண்டும்...! பள்ளி கல்வித்துறை உத்தரவு...!

Sat Nov 18 , 2023
பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் நாட்களை ஈடுசெய்யும் வகையில் சனிக்கிழமை போன்ற நாள்களில் வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை இயக்குனர் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அதி கனமழை பெய்தால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும். மேலும் லேசான மழையோ, தூரலோ இருந்தால் விடுமுறை அறிவிக்க கூடாது. தொடர்ந்து, விடுமுறை குறித்த முடிவை பள்ளி தொடங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்னதாக […]

You May Like