fbpx

சற்றுமுன்…! இந்த 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்…! வெளுத்து வாங்க போகும் கனமழை…!

’நெருங்கும் புயல்’..!! என்ன செய்ய வேண்டும்..? என்ன செய்யக்கூடாது..? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

வரும் 15-ம் தேதி சென்னை, திருவள்ளூர்,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தென் தமிழகம் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் மகாராஷ்டிரா கடற்கரை பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுபெற்று மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து 13ம் தேதி மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இதன் காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தில் அனேக இடங்களிலும் திருப்பூர், கோவை, மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், சேலம் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மறுநாள் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். தஞ்சை, திருவாரூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். வரும் 15-ம் தேதி ( ஆரஞ்சு அலர்ட்) சென்னை, திருவள்ளூர்,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். அக்டோபர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளிலும் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

English Summary

Orange alert for 9 districts

Vignesh

Next Post

ஷாக்!. 37 கோடி பேர்!. 14 வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் கொடூரம்!. யுனிசெப் அறிக்கை!

Sat Oct 12 , 2024
Over 370 million girls and women globally subjected to rape or sexual assault as children

You May Like