fbpx

நெருங்கும் தீபாவளி…! ரேஷன் கடைகளுக்கு 100 சதவீத பொருட்களையும், ஒரே தவணையில் அனுப்ப உத்தரவு…!

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு 100 சதவீத பொருட்களையும், ஒரே தவணையில் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது..

பொங்கல் திருநாளைச் சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழக்கம். அதே போல தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவற்றை இலவசமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இது குறித்து அரசு சார்பில் பரிசீலனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை வரவுள்ளது. பொதுமக்கள் அனைவரும் ரேஷன் கடைகள் மூலம் பொருட்களை வாங்குவார்கள் என்பதால் ரேஷன் கடைகளுக்கு, 100 சதவீத பொருட்களையும், ஒரே தவணையில் அனுப்ப வேண்டும் என தமிழக நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு, உணவு வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு, ரேஷன் கடைகளுக்கு, 100 சதவீத பொருட்களையும், ஒரே தவணையில் அனுப்புமாறு, தமிழக நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு, உணவு வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. வழக்கமாக நாட்களை விட பண்டிகை காலம் என்பதால், ரேஷன் பொருட்களுக்கான தேவை கூடும் என்பதால், தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால், தீபாவளி பண்டிகை காலங்களில் பொதுமக்கள் அனைவரும் ரேஷன் அட்டையை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான பொருட்களை மலிவான விலையில் வாங்கிக் கொண்டு செல்லலாம்.

Vignesh

Next Post

வரிகளால் என்றும் வாழும் கவிஞர் வாலி பிறந்தநாள் இன்று!… எழுத்துக்களால் சிகரம் தொட்டவரின் சில வெற்றி வரிகள் இதோ!

Sun Oct 29 , 2023
வாலியின் தெய்வீக வரிகளுக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. காதல், ஊடல், காமம், சோகம், மகிழ்ச்சி, ஏக்கம் என அனைத்துக்கும் உயிர் தந்து அழகுக்கு அழகு சேர்த்து பாடலில் புகுத்தி உருகவைத்துவிடுவார். பல ஆயிரம் பாடல்கள் எழுதிய வாலி, இலக்‍கிய உலகிலும், இசை உலகிலும் ஈடு இணையற்று கம்பீரமாய் உயர்ந்து நிற்கிறார். அவரின் பாடல் வரியில் மனதை தொட்ட சில பாடல்கள் இங்கே நினைவுக்கூறுவோம். கவிஞர் வாலியின் இயற்பெயர், டி.எஸ்.ரங்கராஜன். […]

You May Like