fbpx

தூள்…! 3 ஆண்டு பாலிடெக்னிக் படித்தால் 12-ம் வகுப்புக்கு சமம்…! தமிழக அரசு மாஸ் அறிவிப்பு…! வெளியான அரசாணை

10- ஆம் வகுப்பு படித்து மூன்று ஆண்டுகள் பாலிடெக்னிக் படித்தால் 12ஆம் வகுப்புக்கு சமம் என்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து உயர்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில்; பத்தாம் வகுப்பிற்குப் பின் பட்டயப்படிப்பு படித்து பின்பு, பி.இ. (B.E.) பட்டப் படிப்புகளில் நேரடி இரண்டாம் ஆண்டு படிப்பு முடித்த மாணவர்கள், +2 படித்து முடித்து, பி.இ. படித்த பாணவர்களுடன் சமமாகக் கருதப்பட்டு, உதவிப் பொறியாளர் பணிக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றனர் என்றும் மேலும், பத்தாம் வகுப்பு படித்து, பட்டயப் படிப்பிற்குப் பின் திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலமாக பட்டப்படிப்பு பெற்று, பல அரசு பணிகளில் ஏற்கனவே வேலையில் உள்ளவர்கள், பணிவரன்முறை செய்வது தொடர்பாக தனியர்கள் தொடர்ந்து அரசுக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்கப்படுகிறது.

இது குறித்து தெளிவான அரசாணை வெளியிடுவதற்காக, 10ஆம் வகுப்பிற்கு பின்பு, மேல்நிலை பள்ளிப்படிப்பு (42) படிக்காமல், பட்டயப்படிப்பு படித்து, பின்பு திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலமாக பட்டப்படிப்பு படித்துள்ளவர்களை, 10ஆம் வகுப்பு, மேல்நிலை வகுப்பு (+2) படித்து, பின்பு திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலமாக பட்டம் பெற்றவர்களுக்கு இணையாக வேலைவாய்ப்பிற்கு கருதலாமா என்ற பொருள் குறித்து இணைக் கல்வி நிர்ணயத் தகுதி குழுவில்’ பரிசீலித்து, அக்குழுவின் பரிந்துரையினை அரசுக்கு அனுப்பி வைக்குமாறு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் கேட்டுக் கொண்டார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில், 03.12.2012 அன்று நடைபெற்ற இணைக் கல்வி தகுதி நிர்ணயக் குழுவின் 37வது கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், இத்தீர்மானத்தின் மீது அரசாணை வெளியிட ஆவன செய்யுமாறும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார். அதன் அடிப்படையில் 10- ஆம் வகுப்பு படித்து மூன்று ஆண்டுகள் பாலிடெக்னிக் படித்தால் 12ஆம் வகுப்புக்கு சமம் என்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

மறு உத்தரவு வரும் வரை..!! தமிழ்நாடு முழுவதும் நாளை முதல்..!! மக்களே இந்த வாய்ப்பை யூஸ் பண்ணிக்கோங்க..!!

Sat Sep 30 , 2023
டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதால் தமிழ்நாடு முழுவதும் நாளை 1,000 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்த பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதே போல் வெயிலும், மழையும் மாறி மாறி வருவதால் பலரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அனைத்து மாவட்ட துணை சுகாதார இயக்குநர்கள் மற்றும் நகர் நல அலுவலர்களுக்கு உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது, மறு […]

You May Like