இன்றைய உணவு முறையின் காரணமாக, உடலுக்கு பல்வேறு உபாதைகள் வந்து சேர்கின்றன. அதில் ஒன்றுதான் தைராய்டு பிரச்சனை. இந்த தைராய்டு பிரச்சனை எதனால் வருகிறது? என்பதைவிட, அதை எப்படி நம்மால் தற்காத்துக் கொள்ள முடியும் என்பது பற்றி, இந்த பதிவில் நாம் காணலாம்.
தைராய்டு பிரச்சனை உடலில் இருப்பவர்கள் அதற்கான மருந்துகளை சாப்பிடுவதோடு, ஆரோக்கியமான சில உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். காளான் உணவை சாப்பிடுவதால், உடலில் செலினியம் சத்து அதிகரிக்கிறது. ஆகவே, இது தைராய்டு கட்டுக்குள் இருக்க உதவி புரியும்.
அதேபோன்று, பூண்டிலும் செலினியம் சத்து அதிகமாக இருப்பதால், இந்த பூண்டை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நன்று என கூறப்படுகிறது. ஒமேகா 3 சத்து அதிகமாக இருக்கும் பசலை கீரையை உணவில் சேர்த்துக் கொள்வது, தைராய்டு குணமாக உதவியாக இருக்கும்.
தைராய்டு சுரப்பி, சரிவர செயல்படுவதற்கு முட்டை மற்றும் பாலில் இருக்கின்ற கால்சியம், இரும்புச்சத்து, ஆகியவை உதவியாக இருக்கிறது. ஓட்ஸ் பார்லியில் இருக்கின்ற விட்டமின் பி போன்ற ஊட்டச்சத்துக்கள் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, தைராய்டை சரி செய்யும் என்று கூறப்படுகிறது.
மேலும், அயோடின் சத்து அதிகமாக நிறைந்து இருக்கின்ற ஸ்ட்ராபெரியை உண்பது, தைராய்டு நோயிலிருந்து, உங்களை வெகுவாக குணப்படுத்தும்.