fbpx

“இத கூட விப்பாங்களா”???? 7 கோடிக்கு விற்கப்பட்ட ஆஸ்கார் விருது!

உலக சினிமாவில் உயரிய அங்கீகாரமாக கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா நேற்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. 95 ஆவது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் உலகின் பல்வேறு பகுதிகளையும் சார்ந்த திரைக் கலைஞர்கள் கலந்து கொண்டனர். இந்தியாவின் சார்பில் இசையமைப்பாளர் கீரவாணிக்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. திரைத் துறையில் இருக்கும் ஒவ்வொரு கலைஞருக்கும் இந்த விருதை ஒரு முறையேனும் வாங்க வேண்டும் என்பது அவர்களது திரை வாழ்வின் லட்சியமாக இருக்கும் . இதற்காகவே பல திரை கலைஞர்களும் இயக்குனர்களும் பல்வேறு விதமான அர்ப்பணிப்புணர்வுடன் உழைத்து வருகிறார்கள். இந்நிலையில் கஷ்டப்பட்டு கடின உழைப்பின் மூலம் பெற்ற ஆஸ்கார் விருதுகளை விற்பனை செய்துள்ள சம்பவங்களும் வரலாற்றில் இடம் பெற்று இருக்கின்றன.

ஆஸ்கார் விருதுகளை வென்ற கலைஞர்கள் அல்லது அவர்களது குடும்பத்தினர் வறுமையின் காரணமாகவோ அல்லது பிற காரணங்களுக்காகவோ ஆஸ்கார் விருதுகளை விற்ற வரலாறுகளும் இருக்கின்றன. 1941 ஆம் ஆண்டு வெளியான சிட்டிசன் கேன் என்ற திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. அந்த திரைப்படத்தில் நடித்திருந்த ஆர்சன் வெல்லஸ் என்பவர் ஆஸ்கார் விருதை வென்றார். ஆனால் அவரது மகள் பீட்ரைஸ் வெல்லஸ் தனது வறுமையின் காரணமாக ஆஸ்கார் விருதை $8,61,542 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்துள்ளார். இதன் இந்திய மதிப்பு 7 கோடி ரூபாய் ஆகும். மேலும் வரலாற்றில் இதுவரை 150 ஆஸ்கார் விருதுகள் விற்பனையாகியுள்ளன.

Baskar

Next Post

வடமாநில தொழிலாளர்கள் மீது மீண்டும் தாக்குதல்! கோவையைச் சார்ந்த மூன்று பேர் கைது!

Mon Mar 13 , 2023
கோவை டவுன்ஹால் பகுதியில் வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடந்ததாக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வந்த வீடியோக்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வட மாநில தொழிலாளர்கள் குறித்தான சர்ச்சைகள் பரவலாக நிலவி வருகின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வட மாநில தொழிலாளர்கள் விரட்டியடிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி வருகின்றன. அவர்களுக்கு உரிய பாதுகாப்பு […]

You May Like