2026 ஆம் ஆண்டு, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் திமுகவின் ஊழல் அமைச்சர்களில், கமிஷன் காந்தியே முதல் நபராக இருப்பார் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்படும் இலவச வேட்டி, சேலை திட்டத்தில் ஆண்டுதோறும் ஊழல் செய்து வருகிறார் அமைச்சர் கமிஷன் காந்தி. அவர் மிகப்பெரிய ஊழல் செய்திருப்பதை நாங்கள் வெளிப்படுத்தினோம். இதுதொடர்பாக என்னிடம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அதிகாரிகள் விளக்கம் கேட்டனர். ஆனால், இன்று வரை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
இந்தாண்டும் வழங்கப்பட்ட இலவச வேட்டியில், வழக்கமாக பயன்படுத்தி வந்த பருத்தி நூலின் அளவை குறைத்துவிட்டு, விலை குறைவாக பாலியஸ்டர் நூலைப் பயன்படுத்தி ஊழல் செய்திருக்கிறார்கள். கூட்டுறவு சங்கங்கள் என்ற பெயரில், தனது பினாமி நிறுவனங்கள் மூலம் மக்கள் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார் அமைச்சர் காந்தி. இந்த ஊழலுக்கு ஐஏஎஸ் அதிகாரி சண்முகசுந்தரம் தடையாக இருந்ததால், அவரை கைத்தறித் துறையில் இருந்து பணிமாற்றம் செய்திருக்கிறார்கள்.
எனவே, இந்த மெகா ஊழலை கடந்தாண்டே நாங்கள் கண்டுபிடித்து கூறியும், முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார். எனவே, இந்த ஊழலில் முதலமைச்சருக்கும் பங்கு செல்கிறது என்பது தானே பொருள். இனியும் கைத்தறித்துறை அமைச்சராக காந்தி நீடிக்கக் கூடாது. உடனே அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
அதேபோல், 2026ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும்போது, சிறைக்கு செல்லவிருக்கும் திமுகவின் ஊழல் அமைச்சர்களில் காந்தியே, முதல் நபராக இருப்பார்” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Read More : அர்ச்சர்களுக்கு செக் வைத்த அறநிலையத்துறை..!! இனி தட்டில் விழும் காணிக்கையை உண்டியலில் போட வேண்டும்..