பிக்பாஸ் சீசன் 7 தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில் போட்டியாளராக இருக்கும் ஐஷு ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடி வந்த நிலையில், தற்போது நிக்சன் உடன் சேர்ந்து ரொமான்சில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் கூட ஐஷு நிக்சனுக்கு முத்தம் கொடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இப்படி எல்லாம் நடந்துகொண்டு வெளியில் எனக்கு ஆள் இருக்கிறார் என நிக்சனிடம் சொல்கிறார். இந்நிலையில், ஐஷுவின் பெற்றோர் தங்களது மகளின் செயலால் குடும்ப மானம் போகிறது என்று கூறி அவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்தே வெளியில் அனுப்பும்படி கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளார்.
ஆனால் இதற்கு பிக்பாஸ் டீம், நாங்கள் அவருக்கு அறிவுரை சொல்கிறோம். சரியான காரணம் இல்லாமல் எங்களால் அவரை வெளியே அனுப்ப முடியாது என்று பதில் அளித்துள்ளது.