2024, ஆகஸ்ட் 25 வரை ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தியில் நிலக்கரி அமைச்சகம் உயர்வை எட்டியுள்ளது.
25.08.2024 நிலவரப்படி, 2024-25 நிதியாண்டில் நிலக்கரி உற்பத்தி 370 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. 2023-24 நிதியாண்டின் இதே காலத்தில் 346.02 மெட்ரிக் டன் என்பதுடன் ஒப்பிடுகையில், இது 7.12 சதவீத அதிகரிப்பாகும். மேலும் நிலக்கரியை வெளியே அனுப்பி வைத்தலும் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. 2024-25 நிதியாண்டில் 2024, ஆகஸ்ட் 25 நிலவரப்படி, 397.06 மெட்ரிக் டன் நிலக்கரி அனுப்பி வைக்கப்பட்டது. முந்தைய ஆண்டு அனுப்பிவைக்கப்பட்ட 376.44 மெட்ரிக் டன் என்பதுடன் ஒப்பிடுகையில், இதன் வளர்ச்சி விகிதம் 5.48 சதவீதமாகும்.
மின்சார அமைச்சகம், நிலக்கரி அமைச்சகம், ரயில்வே அமைச்சகம் மற்றும் மின் உற்பத்தி நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய துணைக்குழுவின் அமைப்பு சிறந்த முறையில் விநியோகச் சங்கிலியை பராமரிப்பதில் திறம்பட பங்காற்றுகிறது. நிலக்கரி உற்பத்தி வளர்ச்சி கடந்த ஆண்டை விட 7.12 % அதிகமாகும். சுரங்க முனையில் இருப்பு 100 மில்லியன் டன்னுக்கும் அதிகமாக உள்ளது. இதனால் மின் துறைக்கு போதுமான நிலக்கரி உள்ளது.