fbpx

பா.சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதி…! உடல் நலம் குறித்து வெளியான பதிவு…!

முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தான் நலமுடன் இருப்பதாக அவர் பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் இரண்டு நாட்கள் தேசிய மாநாட்டை அக்கட்சி நடத்தி வருகிறது. அக்கட்சியின் தேசிய மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் இந்த மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில், அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள், மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், அக்கட்சியின் காரியக் குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இதில், தமிழகத்திலிருந்து காங்கிரஸ் அக்கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் பங்கேற்றிருந்தார். அவர் சபர்மதி ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்த நிலையில், திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மயங்கி விழுந்த அவரை, கட்சி தொண்டர்கள் மருத்துவமனை கொண்டு சென்று சேர்த்தனர். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.

இந்நிலையில் தான் தப்போது நன்றாக இருப்பதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில்; அதிக வெப்பம் காரணமாக, எனக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டது. அனைத்து பரிசோதனைகளும் முடிந்தது. நான் இப்போது முழுமையாக நலமாக இருக்கிறேன். அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.

English Summary

P. Chidambaram admitted to hospital…! Post about his health released

Vignesh

Next Post

பரபரப்பு..! வக்பு சட்டத்திற்கு எதிராக போராட்டம்... மேற்கு வங்க மாநிலத்தில் வன்முறை...! போலீஸ் வாகனங்கள் தீ வைப்பு...!

Wed Apr 9 , 2025
Protest against Waqf Act... Violence in West Bengal...! Police vehicles set on fire

You May Like