fbpx

பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல சமூக ஆர்வலர் காலமானார்…!

பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல சமூக ஆர்வலர் பிரபாபென் சோபாக்சந்த் ஷா காலமானார் ‌.

பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபாபென் சோபாக்சந்த் ஷா தனது 92வது வயதில் காலமானார். பிரபாபென் சோபாக்சந்த் ஷா தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு சமூக சேவகர் ஆவார். இவர் “தாமன் கி திவ்யா” என்றும் அழைக்கப்படுகிறார்.

ஏழை எளிய மக்கள் உணவு உட்கொள்ள கேன்டீன்களை ஏற்பாடு செய்துள்ளார் மற்றும் குஜராத் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அகில இந்திய மகளிர் கவுன்சிலின் “வட்டா வங்கிகளை” ஒருங்கிணைத்து உதவிக்கரம் நீட்டிய பெருமைக்கு சொந்தக்காரர். 2022 ஆம் ஆண்டில், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூவில் சமூகப் பணிக்காக இந்தியாவின் 4 வது உயரிய சிவிலியன் விருதான பத்மஸ்ரீ விருதை பிரபாபென் சோபாக்சந்த் ஷா பெற்றார்.

Vignesh

Next Post

சமூக ஊடக பிரபலங்கள் இந்த புதிய விதிகளை மீறினால்.. ரூ.50 லட்சம் அபராதம்.. வெளியான அதிரடி அறிவிப்பு..

Sat Jan 21 , 2023
சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துவோருக்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகம் நேற்று வெளியிட்டது.. இன்ஸ்டாகிராம், யூ டியூப் போன்ற சமூக ஊடக தளங்களில் அதிக ஃபாலோயர்களை கொண்ட சமூக ஊடக பிரபலங்கள், பிரபலமான பல நிறுவனங்களிடம் இருந்து பணம் பெற்ற அவற்றின் தயாரிப்புகளுக்கு ஆதரவாக விளம்பரம் செய்வதாக கூறப்படுகிறது.. தெரிவிக்கின்றன. இந்நிலையில் சமூக ஊடக பிரபலங்களுக்கான சில வழிகாட்டுதல்களை மத்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் நேற்று வெளியிட்டது.. […]

You May Like