fbpx

#Tngovt: பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி…! செப்டம்பர் 8-ம் தேதி முன்பதிவு செய்யலாம்…!

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி 9-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்பதிவு வருகின்ற 8-ம் தேதி வரை பள்ளிகள் சார்பில் மேற்கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழகத்தில் வருகின்ற செப்டம்பர் 9-ம் தேதி காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் போட்டி நடைபெற உள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு பிரிவிலும் ஓவியத்தில் திறன் பெற்றுள்ள ஒரு மாணவரை போட்டியில் பங்கேற்பதற்கு அனுப்பி வைக்கலாம். இதற்கான தாள்கள் அருங்காட்சியகத்தில் வழங்கப்படும்.

பென்சில்கள் மற்றும் வண்ணங்கள் உள்ளிட்ட பொருட்களை மாணவர்கள் கொண்டுவர வேண்டும். வயதுக்கான அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். கைபேசிகளுக்கு அனுமதி இல்லை. மின்னஞ்சலில் மாணவரின் பெயர் மற்றும் வகுப்பு உள்ளிட்ட அனைத்து விவரங்களும் பள்ளியின் பெயரை சேர்த்து அனுப்பப்பட வேண்டும். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய 044 2819 3238, 94435 26604, 94892 28435 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

வருடாந்திர விடுப்பு 30 நாள்களுக்கு மேல் இருந்தால், அந்த விடுப்புகளுக்கு ஊதியம் வழங்கவேண்டும்!… புதிய விதி!

Thu Sep 7 , 2023
இன்னும் நடைமுறைப்படுத்தப்படாத புதிய நான்கு தொழிலாளர் சட்டங்கள் ஊழியர்கள் மற்றும் முதலாளிகள் இருவருக்கும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும். நாட்டின் தொழிற்சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தொழிலாளர் சட்டம் கடந்த 2019 மற்றும் 2020 ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. தொழில் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் பணிச்சூழல், ஊதியம், தொழில்துறை உறவுகள், சமூக பாதுகாப்பு ஆகிய நான்கு முக்கியமான விதிகள் அடங்கிய புதிய தொழிலாளர் சட்டம் நிறைவேற்றப்பட்டு மூன்றாண்டுகள் ஆன நிலையிலும், இன்னும் […]

You May Like