fbpx

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து.. 6 ராணுவ வீரர்கள் பலி..

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் இன்று விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

ஹெலிகாப்டரில் இரண்டு பெரிய அதிகாரிகள் மற்றும் குறைந்தது மூன்று கமாண்டோக்கள் இருந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றிரவு ஹர்னாய் பலுசிஸ்தானின் கோஸ்ட் அருகே பறக்கும் பணியின் போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ” பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று நேற்றிரவு ஹர்னாய் பலுசிஸ்தானின் கோஸ்ட் அருகே பறக்கும் பணியின் போது விபத்துக்குள்ளானது. 2 விமானிகள் உட்பட 6 வீரர்களும் உயிரிழந்தனர்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

கடந்த மாத தொடக்கத்தில், மற்றொரு பாகிஸ்தானிய இராணுவ ஹெலிகாப்டர் பலுசிஸ்தான் மாகாணத்தில் விபத்துக்குள்ளானது.. இந்த விபத்தில் ஒரு உயர் இராணுவத் தளபதி உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.. பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் பலுசிஸ்தானின் லாஸ்பேலாவில் வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்தபோது விபத்தில் சிக்கியது என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

வாகன ஓட்டிகளை மீண்டும் அச்சுறுத்தும் விளம்பர பேனர்கள்..!! காற்றில் பறந்த ஐகோர்ட் உத்தரவு..!!

Mon Sep 26 , 2022
மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அலட்சியத்தால், மீண்டும் பல இடங்களில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. சென்னையில், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திரும்பும் வகையில் அமைக்கப்பட்ட ‘கட் அவுட்’ எனும் விளம்பர பேனர்களால், ஏராளமான விபத்துகளும், உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. இதையடுத்து, நகரின் எந்த பகுதியிலும், விளம்பர பலகைகள், பேனர்கள் வைக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தது. ஆனால், மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அலட்சியத்தால், மீண்டும் […]
வாகன ஓட்டிகளை மீண்டும் அச்சுறுத்தும் விளம்பர பேனர்கள்..!! காற்றில் பறந்த ஐகோர்ட் உத்தரவு..!!

You May Like