fbpx

60 மணி நேரத்திற்கு பின் வெளியான தேர்தல் முடிவுகள்.! 101 இடங்களை கைப்பற்றிய இம்ரான் கான் ஆதரவாளர்கள்.! ஆட்சியமைக்கப் போவது யார்.?

பாகிஸ்தான் நாட்டின் பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுகள் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்றது. 266 தொகுதிகளுக்கு நடைபெற்ற இந்த பொது தேர்தலில் 44 கட்சிகள் போட்டியிட்டன. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கட்சியான பிடிஐ இந்தத் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டு இருந்தது.

எனினும் அந்தக் கட்சியின் ஆதரவாளர்கள் சுயேச்சையாக தேர்தலில் போட்டியிட்டனர். பொதுத்தேர்தல் வாக்குப்பதிவுகள் வியாழக்கிழமை நடைபெற்ற நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இணையதள வசதிகளில் ஏற்பட்ட தடையால் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்நிலையில் தேர்தல் முடிந்து 60 மணி நேரங்களுக்கு பிறகு பாகிஸ்தான் பொது தேர்தல் முடிவுகள் வெளியாகி இருக்கிறது.

266 தொகுதிகளுக்கு நடைபெற்ற இந்த தேர்தலில் முயற்சியாக போட்டியிட்ட இம்ரான் கானின் ஆதரவாளர்கள் அதிகபட்சமாக 101 இடங்களை கைப்பற்றி இருக்கின்றனர். இதற்கு அடுத்தபடியாக உன்னால் பிரதமர் நவாஸ் ஷெரிப் கட்சியைச் சேர்ந்தவர்கள் 74 இடங்களை கைப்பற்றியுள்ளனர். பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 40க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி இருக்கிறது.

பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் ஆட்சி அமைப்பதற்கு குறைந்தபட்சம் 169 இடங்களை வெற்றி பெற்று இருக்க வேண்டும். இந்த கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை என்றால் அதிக வெற்றி பெற்ற கட்சி கூட்டணி ஆட்சி அமைக்க விண்ணப்பிக்கலாம். இந்தத் தேர்தலில் 101 இடங்களை கைப்பற்றி இருக்கும் இம்ரான் கானின் ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் ஆட்சி அமைக்க உரிமை கோருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் 74 இடங்களை கைப்பற்றி இருக்கும் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் பாகிஸ்தான் மக்கள் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கூறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Next Post

"ஸ்கிரீன் லாக் செய்தாலும் பிளாக் செய்யலாம்.."! Whatsapp புதிய அப்டேட்.!

Sun Feb 11 , 2024
உலகில் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் செய்திகளில் முக்கியமானது வாட்ஸ்அப் . உடனடி குறுஞ்செய்திகள் ஆவண பரிமாற்றம் வீடியோ கால் மற்றும் ஆடியோ கால் என பலவிதமான சேவைகளையும் வழங்கி வருகிறது. வாட்ஸ்அப் அப்ளிகேஷனில் தரத்தை மேம்படுத்தும் பொருட்டு பல்வேறு விதமான அப்டேட்களை மெட்டா நிறுவனம் வழங்கி வருகிறது. இந்நிலையில் ஸ்பேம் மெசேஜ் மற்றும் அழைப்புகளை பயனர்கள் தவிர்க்கும் பொருட்டு புதிய வசதி ஒன்றை மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப் புதிய […]

You May Like