fbpx

“இஸ்லாமிய மதச் சட்டங்களை மீறி திருமணம்..” முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவி புஷ்ரா பிபி-க்கு ‘7’ ஆண்டுகள் சிறை தண்டனை..!!

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். நாட்டின் முக்கிய தகவல்களை கசிய விட்டதாக 10 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில் பல்வேறு நாட்டுத் தலைவர்களிடமிருந்து பெறப்பட்ட பரிசு பொருட்கள் தொடர்பான தோஷகானா வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 14 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இஸ்லாமிய விதிமுறைகளை மீறி திருமணம் செய்ததாக இம்ரான் கான் மனைவியின் முதல் கணவர் அளித்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷாரா பிபி ஆகியோருக்கு 7 வருடங்கள் சிறை தண்டனை வழங்கி பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது. இந்த ஒரு வாரத்தில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு வழங்கப்படும் 2-வது தண்டனை இதுவாகும். மேலும் இம்ரான் கான் வழங்கப்படும் 3-வது தண்டனை இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் புஷ்ரா பிபி என்ற பெண்ணை மூன்றாவதாக கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் முடித்தார். இந்நிலையில் இஸ்லாமிய விதிமுறைகளுக்கு எதிராக இம்ரான் கான் தனது மனைவியை திருமணம் செய்து கொண்டதாக புஷ்ரா பிபியின் கணவர் கவார் மேனகா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இஸ்லாமிய மத சட்டங்களின் அடிப்படையில் ஒரு பெண் கணவரை விவாகரத்து செய்த பிறகு இத்தா என்ற 90 நாட்கள் தனிமையை கடைப்பிடிக்க வேண்டும். ஆனால் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி இத்தா காலகட்டத்தில் திருமணம் செய்ததாக உனக்கு பதிவு செய்திருந்தார்.

இது தொடர்பான விசாரணையில் இம்ரான் கான் மற்றும் புஷ்ரா பிபி இஸ்லாமிய மதச் சட்டங்களை மீறியதாக அவர்களுக்கு 7 வருடங்கள் சிறை தண்டனை வழங்கி பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது. இந்தத் தீர்ப்பை தொடர்ந்து கடந்த ஒரு வாரத்தில் இம்ரான் கானுக்கு 31 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கோடு சேர்த்து அவரது மனைவிக்கு 21 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் பொது தேர்தல் நடைபெற இருக்கும் நேரத்தில் இம்ரான் கானுக்கு அடுக்கடுக்கான தண்டனைகள் வழங்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

'UG/B.E' பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு..!! ரூ.1,12,400/- வரை சம்பளம்.! அருமையான வாய்ப்பை தவறவிடாதீர்கள்.!

Sat Feb 3 , 2024
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கான்பூர் நகரில் இயங்கி வரும் நேஷனல் சுகர் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தில் பணிபுரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி நேஷனல் சுகர் இன்ஸ்டிட்யூட்டில் காலியாக உள்ள சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணியிடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தகுதியும் விருப்பமும் உடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விருப்பம் உடைய […]

You May Like