பாகிஸ்தான் தனது நவீன ஏவுகணை திறன்களை சோதிக்க மீண்டும் தயாராகி வருவதாக பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பின், இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் மேலும் பதற்றத்துடன் காணப்படுகின்றன. இதையடுத்து பாகிஸ்தான் மேற்கொள்ளும் ஏவுகணை சோதனை, அரசியல் மற்றும் பாதுகாப்பு ரீதியாக மிக முக்கியமான அம்சமாக கருதப்படுகிறது.
இந்த சோதனை பாகிஸ்தானின் உள்ளக பாதுகாப்பு காரணங்களுக்காகவே நடைபெறுவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்தாலும், இச்செயலும் நேரமும் சரியான சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ஏனெனில் சமீபத்தில் காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா–பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தைகள் சுணக்கம் அடைந்துள்ளன.
பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை சோதனை நடத்த ஆயத்தமாகி வருவதாக உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ராஜாங்க ரீதியிலான நடவடிக்கைகளை இந்தியா தீவிரப்படுத்தி வரும் நிலையில் ஏவுகளை சோதனைக்கு பாகிஸ்தான் ஆயத்தமாகி உள்ளது.
பாகிஸ்தான் ‘ஷாஹீன்’, ‘ஹத்ஃப்’ தொடர்களில் ஏற்கனவே பல ஏவுகணைகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தற்போது சோதிக்கப்பட உள்ள ஏவுகணையைப் பற்றிய துல்லியமான விபரம் வெளியிடப்படவில்லை என்றாலும், பாதுகாப்பு நிபுணர்கள் இது உயர் துல்லிய ஏவுகணை ஆக இருக்கலாம் என கூறுகின்றனர். இச்சோதனை பாகிஸ்தானின் பல்வேறு மாநிலங்களில், பொதுமக்கள் நெருக்கமற்ற பகுதியில் நடைபெறவிருக்கிறது.
அதற்காக விமான போக்குவரத்திலும், கடலோர பாதுகாப்பு வலயங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், இந்திய பாதுகாப்பு அமைப்புகள் பாகிஸ்தானின் செயல்பாடுகளை நெருக்கடியாக கண்காணித்து வருகின்றன. ஏவுகணை சோதனையைப் பொருத்தவரை இது பாதுகாப்பு சோதனையா அல்லது இந்தியாவுக்கு எதிராக போர் தொடங்கும் நடவடிக்கையா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இதனால் எல்லை நாடுகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
Read more: “ஐ லவ்யூ நானா” காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த தந்தைக்கு மகனின் உருக்கமான விடை..!!