fbpx

60வது முறையாக தந்தையான பாகிஸ்தான் மருத்துவர்…! 4வது திருமணத்திற்கு பெண் தேடுகிறார்…

பாகிஸ்தானை சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு 60வது குழந்தை பிறந்துள்ள சம்பவம் அனைத்து ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்தவர் 50 வயதான சர்தார் ஜான் முகமது கான் கில்ஜி, குவெட்டா நகரின் அருகே வசிக்கும் இவர் மருத்துவ தொழில் செய்துவருகிறார். இவர் இதுவரை 3 பெண்களை திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு 60வது குழந்தை பிறந்துள்ளது. ஆனால் அவர் மீண்டும் திருமணம் செய்து கொண்டு மேலும் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள விரும்புகிறார்.  ஏற்கனவே மூன்று மனைவிகள் உள்ள நிலையில், நான்காவதாக ஒருவரை மணந்து கொண்டு, மேலும் அதிக குழந்தைகளைப் பெறுவதற்கு திட்டமிட்டு வருகிறார். இது குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ள முகமது கான் கில்ஜி, தனது குடும்பத்துடன் உலகம் முழுதும் பயணம் செய்வதை விரும்புவதாகக் கூறினார்.

தனது குடும்பத்தை வெளியில் அழைத்துச் செல்ல பாகிஸ்தான் அரசாங்கம் தனக்கு ஒரு பேருந்தை கொடுத்தால், தன் குழந்தைகளை பாகிஸ்தானில் உள்ள இடங்களுக்கு எளிதாக அழைத்துச் செல்ல முடியும் என தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில், பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. இருப்பினும், குடும்பத்தை விரிவுபடுத்தும் தனது முயற்சியில் உறுதியான அவர், தனது குழந்தைகள் மற்றும் மனைவிகளின் செலவுகளைச் சமாளிக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

#Holiday: பள்ளிகளுக்கு மட்டும் 8-ம் தேதி வரை குளிர்கால விடுமுறை...! அரசு புதிய உத்தரவு...!

Thu Jan 5 , 2023
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளும் குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளும் ஜனவரி 8 ஆம் தேதி விடுமுறை வழங்கப்படுவதாக அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பனிமூட்டம் அதிகம் காணப்படுவதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைனில் வகுப்புகளை எடுக்க வேண்டும். மேலும், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவும் வழங்கப்படும். இதேபோல், ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநில அரசுகளும் […]

You May Like