fbpx

“11 தோல்வி பழனிசாமி” கோழை போல மோடி போடாமல் ஓடிய எடப்பாடி…! அமைச்சர் கடுமையான விமர்சனம்…!

ஈரோடு கிழக்கு தேர்தலிலும் தோற்று, ’11 தோல்வி பழனிசாமி’ என்ற அவப் பெயரை துடைக்க தேர்தலில் போட்டியிடாமல் கோழை போல பழனிசாமி களத்தைவிட்டே ஓடியிருக்கிறார் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; சட்டப்பேரவையில் முதலமைச்சரின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் பயந்து ஓடிய கோழை பழனிசாமி, வெளியே சென்று வழக்கம் போலவே தன் உளறல்களை பேட்டியாக கொட்டியிருக்கிறார். சட்டப்பேரவையில் முதலமைச்சரும் அமைச்சர்களும் சான்றுகளுடன் தோலுரித்த விரக்தியில் செய்தியாளர்களிடம் வண்டி வண்டியாக பொய்களை கொட்டியிருக்கிறார் பச்சைப் பொய் பழனிசாமி.

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறார் பழனிசாமி. இப்படிதான் விக்கிரவாண்டி இடைத் தேர்தலையும் புறக்கணித்தார். இது தேர்தல் புறக்கணிப்பு அல்ல. பழனிசாமி தலைமை மீதான ஆளுமை அசிங்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காக செய்யப்பட்ட ஏற்பாடு இது. 2017 ஆர்.கே.நகர் இடைத் தேர்தல், 2019 நாடாளுமன்ற தேர்தல், 2019-ல் நடந்த 22 சட்டசபை தொகுதிகளின் இடைத் தேர்தல், 2019-ல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், 2021-ல் நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022-ல் நடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தல், ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல், விளவங்கோடு இடைத் தேர்தல் என தொடர்ந்து 10 தேர்தல்களில் தோற்றவர்தான் புரட்சித் தமிழர்.

ஈரோடு கிழக்கு தேர்தலிலும் தோற்று, ’11 தோல்வி பழனிசாமி’ என்ற அவப் பெயரை துடைக்க தேர்தலில் போட்டியிடாமல் கோழை போல பழனிசாமி களத்தைவிட்டே ஓடியிருக்கிறார். தன்னுடைய எஜமான் பாஜகவின் ஓட்டு வங்கிக்கு சேதாரம் வந்துவிடக் கூடாது என்பதற்காக பாதம்தாங்கி பழனிசாமி தேர்தல் புறக்கணிப்பு என்ற கூத்தை அரங்கேற்றியிருக்கிறார். தான் அசிங்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அதிமுகவையே பலீபீடமாக்கியிருக்கிறார். 2026 சட்டசபை தேர்தலுக்காவது வருவாரா? அல்லது ஓடி ஒளிவாரா? என கேள்வி எழுப்பி உள்ளார்..

Vignesh

Next Post

உதிர்ந்த இடத்தில் முடி மீண்டும் வளரணுமா?. தக்காளி சாறுடன் இத மட்டும் சேர்த்து யூஸ் பண்ணுங்க!

Sun Jan 12 , 2025
Want hair to grow back where it fell out? Just mix this with tomato juice and use it!

You May Like