fbpx

பெற்றோர்களே..!! உங்கள் குழந்தையிடம் உடனே விசாரியுங்கள்..!! நாய் கடித்ததை சொல்லாமல் இருந்த சிறுவன் பரிதாப பலி..!!

நாய் கடித்ததை பெற்றோரிடம் சொல்லாத சிறுவன், ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்தசாஹர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஷவாஷ். இந்த சிறுவனை கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு பக்கத்து வீட்டில் வளர்த்து வரும் நாய் கடித்துள்ளது. நாய் கடித்தது குறித்து சிறுவன் தனது பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை. பயத்தால் சிறுவன் யாரிடமும் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், சிறுவனுக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரது நடவடிக்கையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பெற்றோர் சிறுவனிடம் விசாரித்தபோது, தன்னை நாய் கடித்ததாகவும், அது குறித்து உங்களிடம் கூறாமல் மறைத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளான். இதனைக் கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர், உடனடியாக அந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவனை ரேபிஸ் நோய் தாக்கியுள்ளதாகவும், நோயின் தாக்கம் அதிகமாக உள்ளதாகவும் கூறினர். பின்னர், சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தான். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chella

Next Post

3டி வடிவில் வெளியான ரோவரின் கிளிக்ஸ்..!! இஸ்ரோ வெளியிட்ட புதிய புகைப்படம்..!!

Wed Sep 6 , 2023
நிலவில் பிரக்யான் ரோவர் எடுத்த புகைப்படங்களை 3டி வடிவிற்கு மாற்றி இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அந்தப் படத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடமும், அதன் பின்பகுதியில் மேடான இடமும் இருப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. பவுர்ணமி நாளில் நள்ளிரவு நேரத்தில் நாம் சமதளப் பகுதியை பார்க்கும் போது எப்படி ஒரு காட்சி உணர்வு ஏற்படுமோ, அதே உணர்வை நமக்குள் கடத்துகிறது இந்த ச்3டி புகைப்படம். இதுதொடர்பான இஸ்ரோவின் எக்ஸ் பதிவில், அனாக்லிஃப் […]

You May Like