Uttar Pradesh: உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் மிட்டாய் தொண்டையில் சிக்கி 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதை அறிந்திருக்க வேண்டும். சமீப காலங்களில் சாக்லேட், பிஸ்கட் போன்ற பேக் செய்யப்பட்ட உணவுகளில் பூச்சிகள் காணப்படுவதால், சாக்லேட்களை கூட நம்ப முடிவதில்லை. அந்தவகையில் உத்தரபிரதேசத்தில் தற்போது அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கான்பூரில் டோஃபி என்ற மிட்டாய் தொண்டையில் சிக்கி 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பர்ரா காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட பர்ரா ஜரௌலி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 3) மாலை 4 வயது சிறுவன் ஃப்ரூடோலா அந்த மிட்டாயை சாப்பிட்டு கொண்டிருந்தான், இந்த மிட்டாய் மனிதனின் கண் வடிவம் கொண்ட மிட்டாயாகும். கொஞ்சம் பெரிதாக உள்ள அந்த மிட்டாய் அந்த சிறுவனின் தொண்டையில் சிக்கியுள்ளது. அந்த மிட்டாயை அருகில் உள்ள கடையில் இருந்து அந்த சிறுவன் வாங்கியதாக கூறப்படுகிறது.
சிறுவனின் தாயார், உடனே அந்த குழந்தையின் முதுகில் நன்றாக தட்டுவதற்கு பதிலாக பதட்டத்தில் அந்த சிறுவனுக்கு தண்ணீர் கொடுத்துள்ளார். அதன் காரணமாக அந்த மிட்டாய் மேலும் சிறுவனின் தொண்டையில் கொஞ்சம் ஆழமாக சென்றுள்ளது. இதனால் அந்த 4 வயது சிறுவனுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அந்த சிறுவன் கொண்டுசெல்லப்பட் நிலையில் அங்குள்ள மருத்துவர்களாலும் அந்த மிட்டாயை அகற்ற முடியவில்லை என்று கூறப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு விடுப்பில் சென்றதால், டாக்டர்கள் மருத்துவமனைக்கு வரவில்லை என குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் அந்த சிறுவனை மேலும் மூன்று, நான்கு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர்களால் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை. இறுதியில் வெகு நேரம் தொண்டையில் மிட்டாய் சிக்கியதால் குழந்தை மூச்சுத் திணறி இறந்தது. சுமார் மூன்று மணி நேரம் போராடி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. டோஃபி தயாரிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயிரிழந்த குழந்தையின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Readmore: WHO எச்சரிக்கை!. ‘கரையான்கள் போல் ஆபத்து’!. இந்த 5 உணவுகளைத் தவிர்க்கவும்!