கிருஷ்ணகிரி மாவட்ட பகுதியில் உள்ள ஓசூரில் பிரிண்டிங் பிரஸ் நடத்தி மாதேஷ்(57) எனபவர் தனது மனைவி கலைவாணியுடன் (42) வசித்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு பரத் என்கிற ஒரு மகன் உள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினத்தில் இரவில் பரத் வேலை முடித்து விட்டு வீடு திரும்பிய நிலையில் படுத்து உறங்கி விட்டார்.
மறுநாள் காலையில் பரத் எழுந்தபோது பெற்றோர் இருவரும் சடலமாக கிடப்பதை கண்டு கதறி அழுதார். இது பற்றி ஓசூர் பகுதியில் உள்ள காவல்துறையினர் விசாரித்ததில் இருவரும் உணவில் விஷம் கலந்து உண்டுவிட்டு , தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து பெற்றோர்கள் இறப்பதற்கு முன்பு எழுதி வைத்திருந்த கடிதத்தில், ‘தனது பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கை முறையை அமைத்து கொடுக்க முடியவில்லை என்றும், மேலும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள கலைவாணிக்கு மருத்துவம் பார்க்க முடியவில்லை என்றும் இதனால் தற்கொலை செய்து கொள்கிறோம். அத்துடன் எங்களது சாவுக்கு யாரும் காரணம் இல்லை’ என்று அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.