fbpx

பெற்றோர் இனி அலைய தேவையில்லை…! மாணவர்களையே தேடி வரும் திட்டம்!! தமிழக அரசு சொன்ன சூப்பர் குட்நியூஸ்!!

ஜூன் 6ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் ஆதார் பதிவு திட்டத்தைத் தொடங்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “பள்ளிக்கல்வித்துறையில் மாணவ, மாணவிகளின் நலனுக்காக பல்வேறு புதுமையான செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் வகுக்கப்பட்டு முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் மதிய உணவு, விலையில்லா பாடப்புத்தகங்கள், மடிக்கணினி, சீருடை காலணி, புத்தகப் பை, வண்ணப் பென்சில்கள் கணித உபகரணப்பெட்டி, புவியியல் வரைபட புத்தகம், கம்பளிச் சட்டை, மழைக்கால ஆடை, காலுறை, பஸ் பயண அட்டை மற்றும் மிதிவண்டிகள் போன்ற விலையில்லா நலத்திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் மாணவர்களின் தேவைகள் முழுமையாக நிறைவு செய்யப்படுகின்றன. இந்த நலத்திட்ட மாணவர்கள் பெறுவதற்கு ஆதார் எண் அவசியமாகிறது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் அனைவருக்கும் ஆதார் அட்டையை வழங்குவது அவசியம். குறிப்பாக 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து நிலை மாணவர்களும், இடைநிற்றலின்றி தொடர்ந்து கல்வி பயில ஏதுவாக, உதவித்தொகைகள் மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வுதவி மற்றும் ஊக்கத்தொகை அனைத்தும், மாணவ, மாணவிகளுக்கு குறித்த நேரத்தில் முறையாக சென்று சேர்வதை உறுதி செய்யும் விதமாக, நேரடி பயனாளர் பரிமாற்றம் (டி.பி.டி.) மூலம் பயனாளர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்திடும் முறை நடைமுறையில் உள்ளது.

பயிலும் பள்ளிலேயே ஆதார் பதிவு:

பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு’ என்ற சிறப்பு முன்னெடுப்பின் கீழ், அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் அந்தந்த பள்ளியிலேயே ஆதார் எண் பெறுவதற்கும், புதிய பதிவுகள் மற்றும் ஆதார் எண் புதுப்பித்தல் தொடர்பான பணிகளுக்கும், தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தைக் (எல்காட்) கொண்டு செயல்படுத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அப்பணிகளுக்காக எல்காட் நிறுவனம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுக்கான பணிகள் மற்றும் பொறுப்புகள் குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திடம் இருந்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம் 770 ஆதார் பதிவு கருவிகளைக் கொள்முதல் செய்து எல்காட் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. ஆதார் பதிவுகளை மேற்கொள்வதற்கு தேவையான ஆதார் தரவு உள்ளீட்டாளர்களை எல்காட் நிறுவனம் தெரிவு செய்து, அவர்களுக்கு பயிற்சியை வழங்கி அனைத்து மாவட்டங்களிலும் ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், “பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு” என்ற சிறப்பு முன்னெடுப்பானது, வரும் கல்வி ஆண்டின் பள்ளி தொடக்க நாளான 6.6.2024 அன்று அனைத்து மாவட்டங்களில் உள்ள வட்டாரங்களிலும் முழுவீச்சில் செயல்பட உள்ளது. இந்நிகழ்ச்சியை அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில் தொடக்கி வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read More: JOB |’இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை..!’ 40 ஆயிரம் வரை சம்பளம்! ஒரு டிகிரி போதும்!! உடனே அப்ளை பண்ணுங்க!

Rupa

Next Post

அரசு ஊழியர்களுக்கு பண மழை கொட்டப்போகுது..!! தமிழ்நாடு அரசு மாஸ் அறிவிப்பு..!!

Fri May 31 , 2024
The Government of Tamil Nadu has ordered to increase the house rent to the employees working in the central unit of the Government of Tamil Nadu and calculate and pay it from January 1.

You May Like