fbpx

பாரிஸ் ஒலிம்பிக்!. ஒரு பதக்கம்கூட பெறாத இந்தியா!. புள்ளி பட்டியலில் கடைசி!. ரசிகர்கள் ஏமாற்றம்!

India: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இதுவரை ஒரு பதக்கம் கூட பெறாத இந்திய அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பதால் ரசிகர்களிடையே ஏமாற்றமளித்திள்ளது.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ‘ஒலிம்பிக்’ போட்டி பாரீஸ் நகரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.இதில் ஆண்கள் பிரிவில் துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தகுதி சுற்று இன்று நடைபெற்றது இந்த போட்டியில் இந்திய வீரர்கள் சரப் ஜோத் , அர்ஜீன் களம் கண்டனர். சரப் ஜோத் 9வது இடமும்(577 புள்ளிகள்) , அர்ஜுன் 18வது இடமும் (577 புள்ளிகள்) (பிடித்தனர். முதல் 8 இடங்களை பிடித்தவர்கள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் இந்திய வீரர்கள் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர் . துடுப்பு படகு போட்டியில் இந்திய வீரர் பால்ராஜ் பான்வார் தகுதி சுற்றில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

ஆனால், பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இதுவரை ஒரு பதக்கம் கூட பெறாத இந்திய அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பதால் ரசிகர்களிடையே ஏமாற்றமளித்திள்ளது.

10 மீட்டர் ரைபிள் இரட்டையர் கலப்புப் பிரிவில் சீனா தங்கம் வென்றது. இறுதிச் சுற்றில் தென்கொரியாவை வீழ்த்தி முதல் தங்கம் பெற்று சீனா சாதனை படைத்துள்ளது. இதேபோல், ஆஸ்திரேலியாவும் முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. ஆஸ்திரேலிய வீராங்கனை கிரேஸ் பிரௌன் சைக்கிளிங்கில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இந்தப் போட்டியில் பிரிட்டனின் அன்னா ஹெண்டர்சன் வெள்ளிப் பதக்கமும், அமெரிக்காவின் சோல் டைஜர்ட் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

அந்தவகையில், பாரிஸ் ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் ஆஸ்திரேலியா அணி 3 தங்கம், 2 வெள்ளி என மொத்தம் 5 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. இதேபோல், 2 தங்கம், 1 வெண்கலத்துடன் 2வது இடத்தில் சீனாவும், அமெரிக்கா 1 தங்கம், 2வெள்ளி, 2 வெண்கலம் என 3வது இடத்திலும் உள்ளன. பிரான்ஸ், தென்கொரியா, பெல்ஜியம், ஜப்பான் அணிகள் அடுத்தடுத்த இடத்தில் இடம்பெற்றுள்ளன.

பாரீஸ் ஒலிம்பிக்கில் இடம்பெற்றுள்ள அனைத்து நாடுகளும் ஏதாவது ஒரு பதக்கத்தை வென்றுள்ள நிலையில், இந்தியா மட்டும் ஒரு பதக்கம் கூட பெறாமல் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Readmore: பாரிஸ் ஒலிம்பிக்!. திக்.திக்.!. முதல் ஹாக்கி போட்டியில் த்ரில் வெற்றி!. நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபாரம்!

English Summary

Paris Olympics! India that did not get a single medal! Last in the list of points!. Fans disappointed!

Kokila

Next Post

கணவரிடம் சண்டை!. வீட்டை விட்டு வெளியேறிய இளம்பெண் கூட்டுப் பலாத்காரம்!. 4 பேர் வெறிச்செயல்!

Sun Jul 28 , 2024
Rajasthan: Four friends raped a wife who was angry with her husband on the pretext of helping her till she fainted, then continued to do it for four hours....

You May Like