fbpx

‘நாடாளுமன்ற தேர்தல்’..!! ’இந்த செய்தியை யாரும் நம்பாதீங்க’..!! இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம்..!!

ஏப்ரல் 16ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் என வாட்ஸ் அப்பில் பரவும் தகவல் போலியானது என இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் இதுவரை மக்களவை தேர்தல் தேதிகள் எதுவும் அறிவிக்கவில்லை என்றும் முறையாக பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்பட்டு தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பும் டெல்லி யூனியன் பிரதேசத்தின் உதவி தலைமை தேர்தல் அதிகாரி மிசோ சமீபத்தில் அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையை வைத்து, ஏப்ரல் 16ஆம் தேதி மக்களைவை தேர்தல் நடத்தப்படுவதாக சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் தகவல்கள் பரவின.

இது உத்தேச தேதி என்றும் உத்தேச தேதியை நிர்ணயம் செய்வது வழக்கமான நடைமுறை என்றும் தேர்தல் ஆணையம் தனது எக்ஸ் தள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. இந்நிலையில், இந்த செய்தி மீண்டும் பரவி வரும் நிலையில் இரண்டாவது முறையாக தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.

Chella

Next Post

நிர்வாண வீடியோவில் பிக்பாஸ் பிரபலம் அபிராமி..!! தொடரும் டீப் ஃபேக் சர்ச்சை..!!

Tue Jan 30 , 2024
பாலிவுட்டை தொடர்ந்து கோலிவுட் நடிகைகளையும் இந்த டீப் ஃபேக் சர்ச்சை விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது. இதில் பிக்பாஸ் புகழ் நடிகை ஒருவரும் சிக்கியிருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை ராஷ்மிகா மந்தானா டீப் ஃபேக் வீடியோவில் சிக்கினார். இதனைக் கண்டு கோபமடைந்த நடிகர் அமிதாப் பச்சன் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். மகளிர் ஆணையம் இந்த விஷயத்தில் தலையிட டெல்லி காவல்துறை இந்த விஷயத்தை […]

You May Like