fbpx

சிகிச்சையின் போது நோயாளி மரணம்…! மருத்துவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய தடை…! டிஜிபி அதிரடி

மருத்துவ சிகிச்சையின் போது நோயாளிக்கு மரணம் ஏற்பட்டால் மருத்துவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யும் வழக்கமான நடைமுறைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சையின்‌ போது நோயாளிக்கு மரணம்‌ ஏற்பட்டால்‌ அது மருத்துவரின்‌ கவனக்குறைவு அல்லது அலட்சியம்‌ காரணமாக ஏற்பட்டது என்றும்‌, எனவே, இந்திய தண்டனைச்‌ சட்டப்‌ பிரிவு 304 (A).இன் கீழ்‌ வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ என்ற புகாரை குடும்ப உறுப்பினர்கள்‌ காவல்‌ நிலையத்தில்‌ அளிக்கும்‌ போது காவல் நிலைய அதிகாரி உச்சநீதிமன்றம்‌ மற்றும்‌ உயர்‌ நீதிமன்றம்‌ வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்‌.

அத்தகைய சூழ்நிலைகளில்‌ சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரி வழக்குப்பதிவு செய்யும்‌ முன்‌ கீழ்காணும்‌ வழிமுறைகளை கட்டாயம்‌ பின்பற்ற தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்‌ சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்

அதன்படி, முழுமையான விசாரணை நடத்தி அனைத்து விதமான வாய்மொழி மற்றும்‌ ஆவண ஆதாரங்களை திரட்ட வேண்டும்‌. மூத்த அரசு மருத்துவரிடம்‌ குறிப்பாக, அரசு மருத்துவக்‌ கல்லூரி மருத்துவரிடமிருந்துவல்லுநர்‌ கருத்து பெற வேண்டும்‌. இந்திய தண்டனைச்‌ சட்டப்‌ பிரிவு 304 (A) இன்‌ கீழ்‌ குற்ற செயல்‌ உறுதி செய்யப்பட்டால்‌, மேல்‌ நடவடிக்கைக்கு முன்‌ கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின்‌ அடிப்படையில்‌ சட்ட ஆலோசனை பெற வேண்டும்‌.

சிகிச்சையின்‌ போது அலட்சியமாக நடந்து கொண்டதாக ஒரு மருத்துவரின்‌ மீது, குற்றம்‌ சாட்டப்பட்டால்‌ மற்ற வழக்குகளைப்‌ போல்‌ கைது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம்‌ இல்லை. வழக்கு பதிவு செய்வதற்கு முன்பாக வழக்கில்‌ தொடர்புடைய அனைத்து சாட்சிகளையும்‌ சம்பந்தப்பட்ட மாநகர காவல்‌ ஆணையாளர்கள்‌ மற்றும்‌ மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்கள்‌ நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும்‌.

வழக்கின்‌ விவரங்கள்‌, ஆதாரங்கள்‌, சாட்சியங்கள்‌ மற்றும்‌ குற்றம்‌ நடைபெற்ற சூழ்நிலை ஆகியவை தொடர்பான விரைவு அறிக்கையை காவல்துறை தலைமை இயக்குனருக்கு வழக்கு பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள்‌ அனுப்பப்பட வேண்டும்‌.

Vignesh

Next Post

ஜாக்பாட்...! இனி விரிவுரையாளருக்கு மாதம் ரூ.20,000 தொகுப்பூதியம்‌...! முழு விவரம் உள்ளே...

Fri Jun 23 , 2023
கெளரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.20,000 தொகுப்பூதியம்‌ வழங்கப்பட உள்ளது. 2023 – 2024ஆம்‌ கல்வி ஆண்டிற்கு சுழற்சி 1 பாட வேளையில்‌ ஏற்கனவே ஒப்புதல்‌ வழங்கப்பட்ட 4, 318 கெளரவ விரிவுரையாளர்‌ பணியிடங்களுடன்‌, பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளாக இருந்து அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட 41 அரசு கல்லாரிகளுக்கு ஒப்புதல்‌ வழங்கப்பட்ட 1381 கெளரவ விரிவுரையாளர்‌ பணியிடங்களுக்கும்‌ அனுமதி வழங்கவேண்டும்‌ என கல்லூரி கல்வி இயக்குநர்‌அரசுக்குக்‌ கடிதம்‌ எழுதி உள்ளார்‌. மேலும்‌, […]

You May Like