சென்னை மெரினா உள்ளிட்ட கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் BF.7 என்ற புதிய வகை கொரோனா மீண்டும் அதிகரித்துள்ளது. இதையடுத்து, இந்தியாவில் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த வைரஸ் பரவலானது தற்போது தமிழகத்திற்குள் நுழைந்துள்ளது. இதனால், பொது இடங்களில் முகக்கவசம், விமான நிலையங்களில் பரிசோதனை உள்ளிட்டநடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பொது இடங்களில் இரவு 1 மணிக்கு மேல் கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளுக்கு பொதுமக்கள் இரவு 8 மணிக்கு மேல் செல்ல அனுமதி இல்லை. மாலை 6 மணிக்கு மேல் இருசக்கர வாகனங்களில் 2-க்கும் மேற்பட்டோர் சேர்ந்து பயணித்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால், கைது நடவடிக்கை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.