fbpx

மக்களே உஷார்..!! அதிகரிக்கும் டெங்கு..!! 80,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு..!!

இலங்கையில் தொடர்ந்து அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் பாதிப்பால், இதுவரை 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு புள்ளி விவரம் வெளியிட்டுள்ளது.

டெங்கு பாதிப்பு கடந்த சில மாதங்களாக அதிகரித்து வரும் நிலையில், இலங்கையில் டெங்கு பாதிப்பு உச்சத்தைத் தொட்டுள்ளது. டிசம்பரில் மட்டும் இதுவரை 3,704 பேருக்கு டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளன. இதையடுத்து, ஞாயிறு காலை நிலவரப்படி மொத்தம் 80,192 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. டெங்கு பாதித்து 47 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேற்கு மாகாணத்தில் 46.4 சதவீதத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Chella

Next Post

இன்று 6 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கப்போகுது..!! வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

Mon Dec 11 , 2023
தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் நாளை முதல் 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், […]

You May Like