fbpx

மக்களே மறந்துறாதீங்க..!! சென்னையில் நாளை மின்சார ரயில் இயங்காது..!! தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!

சென்னை புறநகர் ரயிலில் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர். இதனால், சென்னையில் பிரதான பொது போக்குவரத்து சேவையாக ரயில் சேவை உள்ளது. வேலைக்கு செல்வோர், கல்லூரி மாணவ, மாணவிகள் பெரும்பாலும் இந்த மின்சார ரயிலில் தான் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை எழும்பூர் – விழுப்புரம் வழித்தடத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட இருப்பதால், சென்னை கடற்கரை – தாம்பரம் இடையேயான மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் ரயில்கள் காலை 10.18 முதல் பிற்பகல் 2.45 வர முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதே போல் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் ரயில்கள் காலை 9.08 முதல் பிற்பகல் 3.20 வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் காலை 11 மணி முதல் பிற்பகல் 2.20 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து காலை 9.30 புறப்படும் ரயில், திருமால்பூரில் இருந்து காலை 11.05-க்கு புறப்படும் ரயில்களும், செங்கல்பட்டில் இருந்து காலை 10 ரயில்களும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

தாம்பரம் – செங்கல்பட்டு இடையே பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கின்றன. தாம்பரம் – செங்கல்பட்டு இடையே காலை 11.51, பகல் 12.35, 1.15, 1.35, 1.55, பிற்பகல் 2.45, 3.10, 3.30 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். அதே போல் செங்கல்பட்டு – தாம்பரம் இடையே காலை 9.30, பகல் 12.00 மணி, 1.00 மணி, 1.15 மணி, பிற்பகல் 2.20 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

அவமானப்படுத்திய மாயா..!! கதறி அழுத அர்ச்சனா..!! முதல் நாளே நடந்த ட்விஸ்ட்..!!

Mon Oct 30 , 2023
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் பல்வேறு புதுமைகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பிக்பாஸ் வீட்டில் இருந்து கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட போட்டியாளர், தனக்கு சுவாரஸ்யம் இல்லாததாக தோன்று 6 பேரை சுமால் பாஸ் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பது விதி. இந்த வார கேப்டனான பூர்ணிமா, புதிதாக பிக்பாஸ் வீட்டிற்கு வந்த அர்ச்சனா, அன்னபாரதி, பிராவோ, கானா பாலா, தினேஷ் ஆகிய 5 பேரையும் தேர்வு செய்து சுமால் பாஸ் […]

You May Like