நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணிகள் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில், இந்தாண்டு திருத்த பணிகள் செய்வதற்கான வாக்காளர் பட்டியல் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் 4 நாட்கள் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்ட நிலையில், கடந்த நவம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைந்துள்ள வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ள நிலையில், இந்த முகாம் மூலம் வாக்காளர் அட்டையில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்க முள்ளிட்ட பணிகளை செய்து கொள்ளும்படி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.