பொதுவாக பண்டிகை காலம் என்று வந்து விட்டாலே சென்னையில் இருக்கும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளின் வாசிகள் அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று விரும்புவது வழக்கம்.
அந்த வகையில், நாளை தமிழ்நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. அதிலும் வார இறுதி நாட்களில் இந்த பக்ரீத் பண்டிகை வருவதால் மாநிலம் முழுவதும் இருந்து தங்களுடைய சொந்த ஊருக்கு சென்று திரும்புவார்கள் பொதுமக்கள். ஆகவே பயணிகள் சிரமம் இன்றி சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் விதமாக, இன்று சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய பகுதிகளுக்கு தினசரி பேருந்துகளுடன் கூடுதலாக 400 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.
மதுரை, கோவை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து முக்கிய இடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் தெரிவித்திருக்கிறது. அத்துடன் பெங்களூருவில் இருந்து மற்ற பகுதிகளுக்கு 400 பேருந்துகள் என்று ஒட்டுமொத்தமாக 800 பேருந்துகள் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.