fbpx

தமிழக மக்களே..!! உங்கள் வீட்டில் இந்த கருவி இருக்கா..? மின்சார வாரியம் பரபரப்பு உத்தரவு..!!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீடுகளில் மின்சார கசிவு காரணமாக உயிர் இழப்புகளை தடுக்க வேண்டும் என்பதற்காக மின்சார வாரியம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

மின் கசிவு, ஓவர் ஓல்டேஜ் காரணமாக சில சமயங்களில் மின்சாரம் தொடர்பான விபத்துகள் ஏற்படும். ஓவர் ஓல்டேஜால், திடீரென மின் ஒயர்கள் தீ பற்றி வீடுகள் பற்றி எரியும் வாய்ப்புகள் உள்ளன. சில இடங்களில் மின் கசிவு ஏற்பட்டு தொழிற்சாலைகள் பற்றி எரியும் வாய்ப்புகளும் உள்ளன. தமிழ்நாட்டில் நடக்கும் பெரும்பாலான தீ விபத்துகளுக்கு மின் கசிவு முக்கியமான காரணம் ஆகும். இதற்கு பழைய ஒயர்கள், சரியாக கனெக்ஷன் கொடுக்காதது என்று பல காரணங்கள் உள்ளன.

தமிழக மக்களே..!! உங்கள் வீட்டில் இந்த கருவி இருக்கா..? மின்சார வாரியம் பரபரப்பு உத்தரவு..!!

வீட்டில் இதுபோன்ற விபத்துகள் ஏற்பட இன்னொரு காரணமும் உள்ளது. அவை ட்ரிப்பர்கள். ட்ரிப்பர்கள் இல்லாமல் இருக்கும் வீடுகள் நிறைய உள்ளன. பொதுவாக வீட்டிற்கு திடீரென ஹை ஓல்டேஜ் மின்சாரம் வந்தால், இந்த ட்ரிப்பர்கள் தானாக ஆஃப் ஆகி, வீட்டில் உள்ள மின்சாதன பொருட்களையும் காக்கும். மின்சாரம் அதிகமாகி விபத்துகளை ஏற்படுத்துவதை இந்த ட்ரிப்பர்கள்தான் காக்கும். இப்போது புதிதாக கட்டப்படும் வீடுகள் அனைத்திலும் இந்த ட்ரிப்பர்கள் வைத்துதான் கட்டுகிறார்கள். ஆனால், பழைய வீடுகளில் இது போன்ற ட்ரிப்பர்கள் வைக்கப்படுவது இல்லை. அப்போது வெறும் பியூஸ் வைப்பதோடு நிறுத்திக் கொள்வார்கள். ஆனால், ட்ரிப்பர்கள் அளவிற்கு இது வேகமாக செயல்படாது.

தமிழக மக்களே..!! உங்கள் வீட்டில் இந்த கருவி இருக்கா..? மின்சார வாரியம் பரபரப்பு உத்தரவு..!!

இந்நிலையில்தான் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீடுகளிலும் ட்ரிப்பர்கள் வைக்கப்பட வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. வீடுகள் மட்டுமின்றி அலுவலகங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள் என்று அனைத்திலும் ட்ரிப்பர்கள் வைக்க வேண்டும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. மின் கசிவை தடுக்கவும், அதிக ஓல்டேஜ் காரணமாக மின் சாதன பொருட்கள் சேதம் அடைந்து தீ விபத்துகள் ஏற்படுவதை தடுக்கவும் ட்ரிப்பர்கள் பயன்பாட்டை உறுதி செய்ய வேண்டும் என்று மின்சார வாரியம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

தமிழ்நாட்டில் இந்த மாதம் மழை எப்படி இருக்கும்..? இந்திய வானிலை ஆய்வு மையம் புதிய தகவல்..!!

Fri Dec 2 , 2022
தமிழகம், புதுவை, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இந்த டிசம்பரில் மழை எப்படி இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஒவ்வொரு மாதத்திற்கான வானிலை முன்னறிவிப்பையும் வெளியிடும். அதன் அடிப்படையில் டிசம்பர் மாதத்திற்கான வானிலை முன்னறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த டிசம்பர் மாதத்தில் இயல்பை ஒட்டி மழை […]

You May Like