ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் மாதம் 30ஆம் தேதி ஆன இன்றுடன் முடிவுக்கு வருகிறது.இதற்கான காலக்கெடு இதற்கு முன் பலமுறை நீட்டிக்கப்பட்டது. இறுதி வாய்ப்பாக ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது பான் எண் மற்றும் ஆதார் எண் உள்ளிட்டவை இணைப்பதற்கான கால அவகாசம் இந்த மாத இறுதிக்குள் முடிவு பெறுகிறது.
முதலில் மார்ச் மாதம் 30ஆம் தேதி வரையில் கொடுக்கப்பட்ட கால அவகாசம் அதன் பிறகு ஜூன் மாதம் 30ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டது.1000 ரூபாய் அபராதமாக செலுத்தி ஆதார் மற்றும் பான் எண்ணின் இணைப்பை மேற்கொள்ள வேண்டும் எனவும் இதற்கு மேல் கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத வான் அட்டைகள் நாளை முதல் செயலிழந்து விடும். அப்படி இணைக்காவிட்டால் பான் அட்டை செயலற்றதாகிவிடும் என்று கூறப்படுகிறது. இந்த பான் அட்டை மூலமாக வரித்தாக்கல் செய்ய இயலாது. நிலுவையில், இருக்கின்ற வரி தாக்கல் நடைமுறையில் மேற்கொள்ளப்படாது.
அதோடு நிலுவையில் இருக்கின்ற வருமான வரி ரீபண்ட் தொகையும் செயலற்ற அந்த பாண அட்டைக்கு செலுத்தப்பட மாட்டாது இது போன்ற பல்வேறு சிக்கல்களை ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்காதவர்கள் சந்திக்க நேரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது