fbpx

மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு..!! மக்களே இதை கவனிச்சீங்களா..? கண்டிப்பா இருக்கணுமாம்..!!

தமிழ்நாடு மின்சார வாரியம் கடந்த சில நாட்களாக அதிரடியான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமின்றி, 5 முக்கியமான அறிவிப்புகளும் தற்போது வெளியாகியுள்ளன.

பாதுகாப்பு கருவி

வீடுகளில் சிறிய பாதுகாப்பு கருவி ஒன்றை பொறுத்த வேண்டும் என்று Tangedco சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி, வீடுகளில் RCD பொருத்துவது, உயிர்களைக் காப்பாற்றுகிறது..! இந்த சிறிய அக்கறை மின்சார வீடுகளில் மின் விபத்துகளைத் தடுக்கும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் Tangedco சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

க்யூஆர் கோடு மூலம் மின் கட்டணம்

க்யூஆர் கோடு மூலம் மின் கட்டணம் செலுத்தும் திட்டத்தை மின்சார வாரியம் கொண்டு வந்துள்ளது. உங்களின் பதிவு செய்யப்பட்ட எண் மூலம் tangedco பக்கத்தில் லாகின் அங்கே உள்ளே க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து பணம் செலுத்த முடியும். அதேபோல் க்யூஆர் கோடு மின்சார வாரிய அலுவலகங்களிலும் இருக்கும்.

மொபைல் செயலி அறிமுகம்

மின் களப்பணியாளர்களுக்கு மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மின்கட்டணம் செலுத்தாமல் உள்ள இணைப்புகள் மற்றும் கட்டணம் செலுத்திய இணைப்புகள் பற்றிய விவரங்களை அறிய முடியும். மேலும், மின் பயன்பாடு கணக்கெடுக்கப்பட்ட மற்றும் கணக்கு எடுக்கப்படாத விவரங்களையும் அறிந்து கொள்ள முடியும்.

கட்டிட நிறைவு சான்றிதழ்

Tangedco வெளியிட்டுள்ள அறிவிப்பில், மின் இணைப்பு பெற ‘கட்டிட நிறைவு சான்றிதழ்’ தேவை இல்லை. 14 மீட்டர் உயரம் மிகாமல் உள்ள 8 குடியிருப்பு அலகுகள் கொண்ட குடியிருப்பு கட்டிடங்களுக்கு நிறைவு சான்றிதழ் இல்லை. 750 சதுர மீட்டர் பரப்பளவிற்கு உட்பட்ட வீடுகளுக்கு நிறைவு சான்றிதழ் இல்லை. 14 மீட்டர் உயரம் மிகாமல் 300 சதுர மீட்டர் கட்டிட பரப்பளவிற்கு உட்பட்ட வணிக கட்டிடங்களுக்கு நிறைவு சான்றிதழ் இல்லை. அனைத்து தொழிற்சாலை கட்டிடங்களுக்கு நிறைவு சான்றிதழ் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்பில் மின் கட்டணம்

தமிழ்நாட்டில் வாட்ஸ் அப் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதியை மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. 500 யூனிட்டுகளுக்கு மேலே உள்ள நுகர்வோர்களுக்கு யுபிஐ (UPI) வாயிலாக கட்டணம் செலுத்தும் வாட்ஸ் அப் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ்அப்பில் TANGEDCO இலச்சினை மற்றும் பச்சை குறியீடு இருக்கும் எண் 94987 94987 என்பதை உறுதி செய்து கட்டணம் செலுத்தலாம்.

அதாவது, பதிவு செய்யப்பட்ட எண்ணில் இருந்து இதற்கு மெசேஜ் அனுப்பினால் அதில் பில் கட்டணம் என்ற ஆப்ஷன் வரும். அதை கிளிக் செய்தால், நம்முடைய கட்டணம் எவ்வளவு என்பது காட்டும். 500 யூனிட்டுகளுக்கு மேலே உள்ள நுகர்வோர்களுக்கு யுபிஐ (UPI) வாயிலாக கட்டணம் செலுத்த முடியும்.

Read More : பிரபல வங்கியில் வேலை..!! விண்ணப்பிக்க நாளையே கடைசி..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

English Summary

The Tamil Nadu Electricity Board has been carrying out intensive work for the past few days. Apart from that, 5 important announcements have been released now.

Chella

Next Post

23 ஜூலை 2024-க்கு முன் சொத்து வாங்கி இருக்கீங்களா? இரட்டிப்பு லாபம்.. மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்!!

Wed Aug 7 , 2024
Indexation relief explained: How proposed amendment benefits property owners

You May Like