fbpx

இந்த 12 மாவட்ட மக்கள் அலர்ட்டா இருங்க… இன்றும், நாளையும் கனமழை பெய்யும்..

தமிழகத்தில் நீலகிரி, கோவை, ஈரோடு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்” தமிழக பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்றும் நாளையும், தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்‌, கரூர்‌, நாமக்கல்‌, திருப்பத்தூர்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌ மாவட்டங்களின்‌ மலை பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 21,22 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஒரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Maha

Next Post

தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளுக்கும் தனி பாதுகாப்பு சட்டம் போட வேண்டும்...! தமிழக அரசுக்கு கோரிக்கை

Tue Jul 19 , 2022
தனியார் பள்ளிகளுக்கும் மருத்துவமனைகளுக்கான பாதுகாப்பு சட்டம் போல் விதிகளை உருவாக்கிட வேண்டும் என தனியார் பள்ளிகள் சங்கங்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் இயங்கிவரும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி பயின்று வந்தவர் 12-ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ம் தேதி பள்ளியின் விடுதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் 17-ம் தேதி பள்ளிக்குள் சில சமூக […]

You May Like