திருத்தப்பட்ட மற்றும் தாமதமான வருமான வரி தாக்கலுக்கான கடைசி வாய்ப்பு டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
கடந்த 2021 – 22ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் ஜூலை 1 ஆகும். அதன் பிறகு அபராதத்துடன் தாக்கல் செய்வதற்கு, கடைசி நாள் டிசம்பர் 31ஆம் தேதியாகும். மேலும், திருத்தப்பட்ட கணக்கை தாக்கல் செய்வதற்கும் கடைசி நாள் டிசம்பர் 31ஆம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு தாக்கல் செய்ய முடியாது. மேலும், சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுக்கும் ஆளாக வேண்டி வரலாம். தற்போது முழுமையாக டிஜிட்டல் மயமாகி விட்ட நிலையில், வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாத நபர்களை மிக எளிதாக கண்டுபிடித்து, அவர் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை, உடனடியாக மேற்கொள்ள முடியும்.
டிசம்பர் 18ஆம் தேதி நிலவரப்படி, இதுவரை கிட்டத்தட்ட 7.06 கோடிக்கும் அதிகமான கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 17ஆம் தேதி நிலவரப்படி, 2.27 லட்சம் கோடி ரூபாய் ‘ரீபண்டு’ வழங்கப்பட்டு உள்ளது.