fbpx

வரலாறு காணாத பேரிடர்…! மக்களை உடனே மீட்க வேண்டும்… இயக்குநர் மாரி செல்வராஜ் வேண்டுகோள்..‌!

வரலாறு காணாத பேரிடரில் இருந்து மக்களை மீட்க வேண்டும் என இயக்குநர் மாரி செல்வராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தென் மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி, நேற்று இரவு வரை பல மணி நேரம் இடைவிடாமல் பெய்த மழையால் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. ஆறுகள், அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு உதவிகளுக்காக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

அத்தியாவசிய தேவைகள் மக்களும் தடையின்றி கிடைக்கும். இந்த மாவட்டங்களில் நீர்நிலைகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன. இதன் காரணமாக தாழ்வான மற்றும் வெள்ள அபாயம் நிலவும் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர். வரலாறு காணாத பேரிடரில் இருந்து மக்களை மீட்க வேண்டும் என இயக்குநர் மாரி செல்வராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்; வரலாறு காணாத பேரிடரில் தென் தமிழ்நாடு சிக்கியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டிருக்கிறது. கிராமங்களை சுற்றியுள்ள எல்லா குளங்களும் உடைபட்டிருக்கிறது. ஸ்ரீவைகுண்டத்துக்கு கிழக்கே உள்ள ஆற்றுபாசனத்திற்கு உட்பட்ட அத்தனை கிராமங்களின் நிலையும் அவ்வளவு கவலை அளிக்கக் கூடியதாக இருக்கிறது. மீட்பு வாகனங்களால், படகுகளால் எதிலும் உள்ளே செல்ல முடியவில்லை. வெள்ளத்தின் வேகம் அப்படியிருக்கிறது.

மேலும் 20க்கும் மேற்பட்ட கிராமங்களை தொடர்புகொள்ளவே முடியவில்லை. இந்த கிராமங்கள் எல்லாமே ஆற்றிற்கும் குளத்திற்கும் நடுவே உள்ள விவசாய வயல்வெளி கிராமங்கள், இதை கருத்தில்கொண்டு எதன் வழியாவது மீட்புபணிகளை மிக துரிதமாக மேற்கொள்ள வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

5 மாவட்டங்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை..!! மக்களே பாதுகாப்பான இடத்துக்கு போங்க..!!

Tue Dec 19 , 2023
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. இதனால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி மறுகால் பாய்கிறது. மேலும், அணைகளில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. எங்கு திரும்பினாலும் […]

You May Like