‘பத்ம’ விருதுகள் பெற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை பற்றி படிக்குமாறு நாட்டின் குடிமக்களை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.
2023 ஆம் ஆண்டின் முதல் ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர் “ பழங்குடியின மக்கள், ஓவியர்கள், இசைக்கலைஞர்கள், விவசாயிகள், கைவினைஞர்கள் – பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களின் எழுச்சியூட்டும் கதைகளைப் படிக்குமாறு அனைத்து நாட்டு மக்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். டோட்டோ, ஹோ, குய், குவி, மந்தா போன்ற பழங்குடி மொழிகளில் பணியாற்றிய பல சிறந்த ஆளுமைகள் பத்ம விருதுகளைப் பெற்றுள்ளனர்..” என்று தெரிவித்தார்..
மேலும் “ இந்த முறை பத்ம விருது பெற்றவர்களில் நமது பாரம்பரிய இசைக்கருவிகளான சந்தூர், பாம்ஹம், த்விதாரா போன்ற இசைக்கருவிகளை இசைப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்கள் உள்ளனர். பழங்குடியினரின் வாழ்க்கை நகரங்களின் சலசலப்பிலிருந்து வேறுபட்டது.. அதன் சவால்களும் வேறுபட்டவை. இருப்பினும், பழங்குடி சமூகங்கள் எப்போதும் தங்கள் பாரம்பரியங்களைப் பாதுகாக்க தயாராக உள்ளன,” என்று மோடி கூறினார்.
ஜனவரி 14 ஆம் தேதி, நாடு முழுவதும் வடக்கிலிருந்து தெற்கு மற்றும் கிழக்கிலிருந்து மேற்கு வரை திருவிழாக்களின் பிரகாசம் நிறைந்துள்ளது. இதைத் தொடர்ந்து, நாடு குடியரசு தினத்தையும் கொண்டாடுகிறது. இந்த முறையும் குடியரசு தின விழாவின் பல அம்சங்கள் வெகுவாகப் பாராட்டப்படுகின்றன” என்று பிரதமர் மோடி கூறினார்.
இந்திய ஜனநாயகத்தின் வரலாற்றைப் பற்றிப் பேசிய பிரதமர், “ஜனநாயகம் நமது நரம்புகளில் உள்ளது, அது நமது கலாச்சாரத்தில் உள்ளது.. இது பல நூற்றாண்டுகளாக நமது வேலையின் ஒருங்கிணைந்த பகுதியாகும். இயல்பிலேயே நாம் ஒரு ஜனநாயக சமூகம். இந்தியாவின் முன்மொழிவுக்குப் பிறகு சர்வதேச யோகா தினம் மற்றும் சர்வதேச தினை ஆண்டு ஆகிய இரண்டையும் ஊக்குவிக்க ஐக்கிய நாடுகள் சபை முடிவு செய்துள்ளது.
இப்போது மக்கள் தினையை தங்கள் உணவின் ஒரு பகுதியாக மாற்றி உள்ளனர். இந்த மாற்றத்தின் மிகப்பெரிய தாக்கமும் தெரிகிறது. பாரம்பரியமாக தினை உற்பத்தி செய்யும் சிறு விவசாயிகள் மிகவும் உற்சாகமாக உள்ளனர்.. இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் ஜி20 மாநாடு நடக்கிறது, அங்கு தினையால் செய்யப்பட்ட சத்தான உணவுகள் பரிமாறப்படுகின்றன..” என்று பிரதமர் மோடி மேலும் கூறினார்.